Flipkart Diwali Sale: பிளிப்கார்டில் ஆஃபரில் ஸ்மார்ட்போன்.. எப்போது தெரியுமா?
பிளிப்கார்ட் ஷாப்பிங் தீபாவளி விற்பனையில் ஐபோன் 16 மாடல் ரூ.50,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி விற்பனையில் ஐபோன் 16 வாங்கும் வாய்ப்பை தவறவிட்டவர்கள் இந்த பிக் பேங் தீபாவளி விற்பனையை பயன்படுத்திக் கொள்ளலாம். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சலுகை மூலம் ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் பெறலாம்.

சமீபகாலமாக ஆன்லைனில் மின்னணு பொருட்களை வாங்குபவர்கள் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. செல்போன் தொடங்கி அதன் உப பொருட்களான சார்ஜர், ஹெட்போன், வயர்லெஸ் இயர்போன் என சகல பொருட்களும் எளிதில் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஆஃபருடன் கிடைப்பதே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. பிளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்கள் அடிக்கடி சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றன. சமீபத்தில் கூட நவராத்திரியை முன்னிட்டு கிட்டதட்ட 10 நாட்கள் சலுகை விலையில் பொருட்களை வாரி வழங்கியது. இதனை மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி பல்வேறு விதமான பொருட்களையும் வாங்கி மகிழ்ந்தனர்.
இப்படியான நிலையில் நவராத்திரி திருவிழாவின்போது ஐபோன் 16 மாடல் சூப்பரான தள்ளுபடி விலைக்கு கிடைத்தது. இதனை ஏராளமானோர் போட்டிப் போட்டுக் கொண்டு ஆர்டர் செய்தனர். சிலர் இதனை தவற விட்ட நிலையில் மீண்டும் ஒரு பொன்னான வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. ஆம்! வரும் 2025, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
Also Read: ஆன்லைன் ஷாப்பிங்கில் இந்த விஷயங்களை கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க.. இல்லனா சிக்கல்!
இதனை முன்னிட்டு பிளிப்கார்ட் வலைத்தளம் தீபாவளி விற்பனை தொடங்கவுள்ளது. அக்டோபர் 11 ஆம் தேதி தொடங்குனாலும், பிளஸ் மற்றும் பிளாக் உறுப்பினர்களுக்கு 24 மணி நேர முன்கூட்டியே இந்த வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி விற்பனையின் போது, மிகப்பெரிய தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்களைப் பெறலாம் என சொல்லப்படுகிறது.
குறிப்பாக நவராத்திரி பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது ஐபோன் 16 போன் வாங்கும் வாய்ப்பை நீங்கள் தவறவிட்டிருந்தால் பிக் பேங் தீபாவளி விற்பனையில், ரூ. 50,000க்கும் குறைவான விலையில் இதனை நீங்கள் பெற முடியும். இதற்கிடையில் ஐபோன் 16 மாடலின் தீபாவளி விற்பனை விலையை பிளிப்கார்ட் இன்னும் குறிப்பிட்டு சொல்லவில்லை.
ஆனால் SBI வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் ரூ.50,000க்கும் குறைவான விலையில் ஐபோன் 16 கிடைக்கும் என்பதை பிளிப்கார்ட் வெளியிட்டுள்ள வீடியோ உறுதிப்படுத்துகிறது. பிளிப்கார்ட் அனைத்து ஸ்மார்ட்போன்களும் பிக் பில்லியன் டேஸ் சலுகை விலையில் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளதால், ஐபோன் 16 சலுகை தவிர்த்து சுமார் ரூ.48,399க்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . முந்தைய விற்பனையின் போது, ஐபோன் 16 ரூ.51,999க்கு விற்பனையானது. மேலும் வங்கி தள்ளுபடிகளுடன் விலை ரூ.48,399 வரை குறைந்தது.
Also Read: உங்கள் வருமானத்துக்கு ஏற்ற கிரெடிட் கார்டு வரம்பு எவ்வளவு? எப்படி கணக்கிடுவது?
நவராத்திரி , பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது பிளிப்கார்ட் முன் முன்பதிவு பாஸை அறிமுகப்படுத்தியது. அதனைப்போல ஐபோன் 16 பெற ஏதேனும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது பற்றி அறிவிப்பு வெளியாகவில்லை. ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விலை கொண்ட முன்பதிவு பாஸை ஒருமுறைப் பெற்றால் ரத்து செய்ய முடியாது. பணத்தைத் திரும்பப் பெற முடியாது.
ஸ்மார்ட்போன் ஆர்டரை முடித்தவுடன் இறுதி கட்டணத்திலிருந்து பாஸூக்கான தொகை கழிக்கப்படும். பாஸ் வாங்குபவர்கள் 48 மணி நேரத்திற்குள் தங்கள் திட்டத்தை முடிக்க வேண்டும். இல்லையெனில், பாஸ் எந்த பணத்தையும் திரும்பப் பெற முடியாமல் காலாவதியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.