வீட்டில் இருந்தே சேவைகளை பெற வந்தாச்சு mAadhaar செயலி.. பதிவிறக்கம் செய்வது எப்படி?
How to Download mAadhaar App | ஆதார் கார்டில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் இ சேவை மையங்கள் அல்லது இணையதளத்தை நாட வேண்டிய தேவை உள்ளது. இந்த நிலையில் தான் பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில் அரசு எம் ஆதார் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியர்களின் முக்கிய அடையாள ஆவணமாக உள்ளதுதான் ஆதார் கார்டு (Aadhaar Card). ஒருவர் இந்தியர் என்பதை உறுதி செய்வதற்கு ஆதார் அடிப்படை அடையாள ஆவணமாக உள்ளது. இத்தகைய முக்கிய ஆவணமாக ஆதார் உள்ள நிலையில், அதில் இருக்கும் தகவல்கள் சரியானதாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதற்காக ஒவ்வொரு சேவையை பெறுவதற்காகவும் பொதுமக்கள் இ சேவை மையங்களை நாடுகின்றனர். இந்த நிலையில் பொதுமக்களின் சிரமத்தை குறைக்க அரசு எம் ஆதார் (mAadhaar) செயலியை அறிமுகம் செய்துள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன, அதனை எப்படி பதிவிறக்கம் செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியர்களுக்கு முக்கிய அடையாள ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டு
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கு ஆதார் கார்டு மிக முக்கிய ஆவணமாக உள்ளது. ஒரு குழந்தை பள்ளியில் சேறுவது முதல் வங்கியில் கடன் வாங்குவது உள்ளிட்ட சேவைகளுக்கு ஆதார் கார்டு மிக முக்கிய ஆவணமாக உள்ளது. ஆதார் இல்லையென்றால் பல வேலைகளை செய்ய முடியாத சூழல் தான் உள்ளது. எனவே ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி ஆகிய தகவல்கள் மிக சரியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.
இதையும் படிங்க : கிரெடிட் கார்டு பயனர்களுக்கு அதிர்ச்சி.. இனி இந்த தேவைக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்த முடியாது.. ஆர்பிஐ முக்கிய உத்தரவு!




ஒருவேளை ஆதாரில் இருக்கும் தகவல்கள் ஏதேனும் பிழையாக இருந்தால் அரசின் சேவைகளை பெற முடியாமல் போய்விடும். இதற்காக ஒவ்வொரு விவரங்களுக்கும் இ சேவை மையங்களுக்கு சென்று சரிசெய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் மிக எளிமையாக சேவைகளை பெறும் வகையில் அரசு எம் ஆதார் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
எம் ஆதார் என்றால் என்ன?
எம் ஆதார் என்பது பொதுமக்கள் ஆதார் சேவைகளை வீட்டில் இருந்தே பெரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு செயலி ஆகும். இந்த செயலி மூலம் ஆதார் தகவல்களை புதுப்பித்தல், முகவரியை மாற்றுதல் உள்ளிட்ட சேவைகளை மிக சுலபமாக செய்துக்கொள்ளலாம். உங்கள் ஆதார் அட்டையின் டிஜிட்டல் வடிவத்தை இந்த ஆப் மூலம் பெற்று அதை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க : EPFO : இபிஎஃப்ஓவில் வந்த புதிய விதி.. இனி PF Transfer சுலபமாகிவிடும்.. எப்படி தெரியுமா?
எம் ஆதாரை பதிவிறக்கம் செய்வது எப்படி?
இ சேவைக மையங்களுக்கு சென்று பெற வேண்டிய சேவைகளை பெற்றுக்கொள்ள இந்த சேவையை கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.