Post Office Scheme : மாற்றமில்லை.. அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
Post Office Schemes Interest Rates | இந்திய மக்களுக்காக அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அஞ்சலக சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் குறித்து அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அஞ்சலகங்கள் (Post Office) மூலம் அரசு பல வகையான சேமிப்பு (Saving) மற்றும் முதலீட்டு (Investment) திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், அதற்கான வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அஞ்சல சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை என அரசு அறிவித்துள்ளது. முன்னதாக அக்டோபர் 1, 2025 முதல் இந்த திட்டங்களுக்கான புதிய வட்டி விகிதங்கள் அமலுக்கு வரும் என மத்திய நிதித்துறை அமைச்சகம் (Central Finance Ministry) அறிவித்த நிலையில், தற்போது எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் சேமிப்பு திட்டங்கள்
பொது மக்களின் நலனுக்காக அரசு அஞ்சலகங்கள் மூலம் பலவகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிக வட்டியுடன் கூடிய இந்த திட்டங்கள் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால் நிதி இழப்பு அபாயம் மிக குறைவாக இருக்கும் பட்சத்தில் பெரும்பாலான பொதுமக்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். சாமானிய மக்கள் மத்தியில் இந்த திட்டங்கள் மிகப் பிரபலமாக உள்ள நிலையில், அவற்றுக்கான வட்டி விகிதத்தில் முக்கியமா மாற்றம் வர உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அஞ்சலக சேமிப்பு மற்றும் முதலீடு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என அரசு அறிவித்துள்ளது. அதன்படி இதற்கு முன்பு இருந்ததைப் போலவே அஞ்சலக சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களின் வட்டி தொடரும் என்பது உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க : பண்டிகை காலத்தில் வீடு வாங்க போறீங்களா?.. அப்போ இந்த விஷயங்களை கட்டாயம் கவனியுங்கள்!




அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான வட்வி விகிதங்கள்
- அஞ்சலக சேமிப்பு முதலீடு – 4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது
- 1 ஆண்டுக்கான டைம் டெபாசிட் – 6.9 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது
- 2 ஆண்டுக்கான டைம் டெபாசிட் – 7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது
- 3 ஆண்டுக்கான டைம் டெபாசிட் – 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது
- 5 ஆண்டுக்கான டைம் டெபாசிட் – 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது
- 5 ஆண்டுக்கான ரெக்கரிங் டெபாசிட் – 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது
- மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் – 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது
- மாத வருமான திட்டம் – 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது
- தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் – 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது
- பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் – 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது
- கிசான் விகாஸ் பத்ரா திட்டம் – 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது
- சுகன்யா சம்ரித்தி யோஜனா – 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது
இதையும் படிங்க : பண்டிகை காலத்தில் முறையாக தங்கம் வாங்குவது எப்படி?.. இந்த விஷயங்களை செக் பண்ணுங்க!
மேற்குறிப்பிட்ட இந்த வட்டி விகிதங்கள் ஆறு காலாண்டுகளாக அப்படியே நீடித்து வரும் நிலையில், தற்போது எந்த வித மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.