பண்டிகை காலத்தில் வீடு வாங்க போறீங்களா?.. அப்போ இந்த விஷயங்களை கட்டாயம் கவனியுங்கள்!
Festival Home Buying Guide | இந்தியாவில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவுடன் ஏராளமான பொதுமக்கள் உள்ளனர். அதற்காக் பணம் சேமிக்கும் பொதுமக்கள் பலரும் பண்டிகை காலங்களின் போது வீடு வாங்குகின்றனர். அத்தகைய சூழலில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் பண்டிகை காலங்களின்போது (Festival Season) அதிகமகாக வீடுகள் விற்பபை செய்யப்படுகின்றன. பண்டிகை காலங்களின்போது வீடு வாங்குவதை சிறப்பானதாக கருதும் பொதுமக்கள் பல மாதங்கள் காத்திருந்து பண்டிகை காலத்தில் வீடுகளை வாங்குகின்றனர். அவ்வாறு பண்டிகை காலங்களில் வீடு வாங்கும்போது சில விஷயங்களை கவனிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பண்டிகை காலங்களில் வீடு வாங்க விருன்பும் இந்திய பொதுமக்கள்
இந்தியர்களை பொருத்தவரை ஒவ்வொருவரும் தங்களுக்கென சொந்த வீடு வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக அவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் சிறுக சிறுக பணத்தை சேமிக்க தொடங்குவர். அவ்வாறு பணத்தை சேமிக்கும் பொதுமக்கள் பண்டிகை காலங்களின் போதே வீடு வாங்குகின்றனர். இந்தியாவில் பண்டிகை காலங்கள் வீடு வாங்குவதற்கான காலமாக கருதப்படுகிறது. குறிப்பாக 2023 ஆம் ஆண்டில் மட்டும் செப்டம்பர் மற்றும் டிசம்பர் காலக்கட்டத்தில் இந்தியாவில் சுமார் 1.5 லட்சம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : சிறிய கடைகள் ஜிஎஸ்டியில் பதிவு செய்வது கட்டாயமா? விதிகள் என்ன சொல்கிறது?
இந்தியர்கள் வீடு வாங்கும் விகிதம் 2024 ஆம் ஆண்டு மேலும் அதிகரித்துள்ளது. அதாவது 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அதாவது ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 2.2 லட்சம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பண்டிகை காலங்களை வீடு, நகை வாங்குவதற்கான முக்கிய காலக்கட்டமாக பொதுமக்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக பண்டிகை காலங்களில் அதிக அளவிலான வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
வீடு என்பது வாழ்நாள் முழுவதுக்குமான சொத்தாக கருதப்படுகிறது. எனவே வீடு வாங்கும்போது சில விஷயங்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.
முக்கிய ஆவணங்கள்
- வீட்டை யார் யாரெல்லாம் பயன்படுத்தி வந்தார்கள், வீட்டை விற்பனை செய்யும் நபருக்கு அதற்கான உரிமை உள்ளதா என்பது தொடர்பான ஆவணங்கள்.
- நீங்கள் வாங்கும் வீட்டின் மீதான எந்த விதமான கடனும் நிலுவையில் இல்லை என்பதற்கான வில்லங்கச் சான்றிதழ்.
- மாநகராட்சியிடம் இருந்து பெறப்படும் கட்டட அனுமதி.
- தொடக்கச் சான்றிதழ், நிறைவு சான்றிதழ் மற்றும் ஆக்கிரமிப்புச் சான்றிதழ்.
- நில பயன்பாடு மாற்றப்பட்டு இருந்தால் நில பயன்பாட்டை மாற்றுதல் அல்லது மண்டல அனுமதிக்கான சான்றிதழ்.
- தீ பாதுகாப்பு, மாசு கட்டுப்பாடு, விமான நிலைய உயர கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கான சான்றுதழ்.
வீடு கட்டுவதற்கு முன்னதாக மேற்குறிப்பிட்ட இந்த சான்றிதழ்கள் சரியாக உள்ளனவா என்பது குறித்து உறுதி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.