பொதுமக்கள் இரண்டு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டும்?.. ஏன்?.. பொருளாதார வல்லுநர்கள் கூறுவது இதுதான்!
Use Two Credit Cards to Manage Finance | தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் இரண்டு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், இரண்டு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். அது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் கிரெடிட் கார்டு (Credit Card) பயன்பாடு அதிகரித்துள்ளது. பெரும்பாலான பொதுமக்கள் தங்களது நிதி தேவைகளுக்காக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான கிரெடிட் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், தங்களது செலவுகளை மேம்படுத்த பொதுமக்கள் இரண்டு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டுமா?, அது குறித்து பொருளாதார வல்லுநர்கள் கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள கிரெடிட் கார்டு
விலையேற்றம், பொருளாதார மந்தநிலை ஆகியவை பொதுமக்களின் வாழ்வாதாரத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தங்களுக்கு ஏற்படும் பொருளாதார சிக்கல்களை சரிசெய்ய பெரும்பாலான பொதுமக்கள் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். கிரெடிட் கார்டுகளில் 45 நாட்கள் சுழற்சியின் அடிப்படையில் கடனை திருப்பி செலுத்த அனுமதி வழங்கப்படுகிறது. இது பொதுமக்களுக்கு கடனை திருப்பி செலுத்த மிகுந்த பயனுள்ளதாக உள்ளது.
இதையும் படிங்க : யுபிஐ சேவை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு வரை – அக்டோபர் 1 முதல் வரும் மிகப்பெரிய மாற்றங்கள்




பொதுமக்கள் இரண்டு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டுமா?
கிரெடிட் கார்டுகள் பல வகையான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளன. அதாவது ஒவ்வொரு வகையான ஷாப்பிங்குக்கும் ஒவ்வொரு விதமான கிரெடிட் கார்டுகள் உள்ளன. உதாரணமாக ஒரு சில கிரெடிட் கார்டுகள் உடைகள் உள்ளிட்ட ஷாப்பிங்குகளுக்கு சிறந்ததாக உள்ளது. ஒருசில கிரெடிட் கார்டுகள் பண பரிவர்த்தனை ஆகியவற்றுக்கு சிறந்ததாக உள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் அதற்கு ஏற்றார் போல் இரண்டு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க : உங்கள் ITR Refund கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டதா?.. அப்போ உடனே இத பண்ணுங்க!
இரண்டு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது ஏன் சிறந்தது?
இரண்டு கிரெடிட் கார்டுகளை இரண்டு விதமான தேவைகளுக்காக பயன்படுத்தலாம். அதாவது ஒரு கார்டு சமையல் பொருட்களுக்கான சிறப்பு சலுகைகள் வழங்கும் கிரெடிட் கார்டாக தேர்வு செய்ய வேண்டும். மற்றொரு கிரெடிட் கார்டு பயணம், ஆன்லைன் ஷாப்பிங் ஆகியவற்றுக்கு சிறப்பு பலன்களை வழங்கும் கிரெடிட் கார்டாக இருக்க வேண்டும். இதன் மூலம் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்வது மட்டுமன்றி அதற்கான சிறப்பு பலன்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க உதவும்
வங்கிகளில் கடன் வாங்க வேண்டும் என்றால் கிரெடிட் ஸ்கோர் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்தி அதற்கு முறையாக கட்டணம் செலுத்தி வந்தீர்கள் என்றால் உங்களுக்கு சிறந்த கிரெடிட் ஸ்கோர் (Credit Score) இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.