Credit Card : வங்கி கணக்கு இல்லாமல் கிரெடிட் கார்டு பெற முடியுமா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Credit Card Without Bank Account | இந்தியாவில் பொதுமக்கள் மத்தியில் கிரெடிட் கார்டு ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. இந்த நிலையில், வங்கி கணக்கு இல்லாமல் கிரெடிட் கார்டு வாங்க முடியுமா, அதற்கான விதிகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தற்போதைய காலக்கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்களது நிதி தேவைகளுக்காக கிரெடிட் கார்டுகளை (Credit Card) பயன்படுத்த தொடங்கிவிட்டனர். குறைவான மாத ஊதியம் உள்ளவர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களுக்கு ஏற்படும் கூடுதல் நிதி தேவைகளை கிரெடிட் கார்டுகள் மூலம் பூர்த்தி செய்துக்கொள்கின்றனர். பலருக்கும் கிரெடிட் கார்டு மிகவும் பயனுள்ள அம்சமாக உள்ள நிலையில், வங்கி கணக்கு இல்லாமலே கிரெடிட் கார்டு வாங்க முடியுமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு
இந்தியாவில் பொதுமக்கள் ஏடிஎம் (ATM – Automated Teller Machine) கார்டுகளை பயன்படுத்துவதை போலவே கிரெடிட் கார்டுகளை தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதாவது கிரெடிட் கார்டில் பயன்படுத்தும் பணத்தை 45 நாட்கள் கழித்து திருப்பி செலுத்த அனுமதி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக பலரும் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துக்கொண்டு பிறகு அந்த தொகையை மாத தவணை மூலம் செலுத்துகின்றனர். இது மிகவும் எளிமையான முறையாக உள்ள நிலையில், பலருக்கும் இது மிகவும் பயனுள்ள அம்சமாக உள்ளது.
இதையும் படிங்க : ITR Filing : கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்யலாமா?.. வல்லுநர்கள் கூறுவது என்ன?




வங்கி கணக்கு இல்லாமல் கிரெடிட் கார்டு பெற முடியுமா?
பெரும்பாலான வங்கிகள் வங்கி கணக்கு இல்லாமல் கிரெடிட் கார்டு வழங்கவில்லை என்றாலும் சில நிதி நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் ஆகியவை வங்கி கணக்கு இல்லாமலே கிரெடிட் கார்டு பயன்படுத்த கொடுக்கின்றன. இந்த கிரெடிட் கார்டுகள் வங்கிகள் மூலம் வழங்கப்படும் கிரெடிட் கார்டுகளில் இருக்கும் அனைத்து நன்மைகளையும், பலன்களையும் கொண்டிருக்கும். அதாவது ஏதேனும் பொருட்களை வாங்குவது, கடன் செலுத்துவது, டிக்கெட் புக் செய்வது என அனைத்து சேவைகளையும் இந்த கிரெடிட் கார்டுகள் மூலமும் பெற முடியும்.
இதையும் படிங்க : Pre Approval முதல் Easy EMI வரை.. பண்டிகை காலத்துக்கு லோன் வழங்கும் பஜாஜ் ஃபைனான்ஸ்!
யாரெல்லாம் இந்த கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்?
- இந்த கிரெடிட் கார்டை வாங்க விண்ணப்பிக்கும் நபருக்கு 21 வயது குறையாமல் இருக்க வேண்டும்.
- அந்த நபருக்கு தொழில் அல்லது வேலையில் இருந்து நிலையான வருமானம் வர வேண்டும்.
- 750-க்கு மேல் கிரெடிட் ஸ்கோர் கொண்டுள்ளவர்களுக்கு இந்த கிரெடிட் கார்டு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இந்த கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க பான் கார்டு, ஆதார் கார்டு, புகைப்படம், சேலரி ஸ்லிப் உள்ளிட்டவற்றை சமர்பிக்க வேண்டும் என்பது கட்டாமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.