வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? வருமான வரித்துறை சொல்வது என்ன?
Cash at home rules: வீட்டில் பணத்தை சேமித்து வைக்கும் பழக்கம் மாறவில்லை. ஆனால், நம் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்ற கேள்வி எழலாம். வருமான வரிச் சட்டத்தின் பிரிவுகள் 68, 69, 69B ஆகியவை பணத்தை வைத்திருப்பது குறித்து விளக்குகின்றன.

உலகமே டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி நகர்கிறது, ஷாப்பிங் முதல் பணம் செலுத்துதல் வரை அனைத்தும் ஆன்லைனில் நடக்கிறது. இருப்பினும், பலர் இன்னும் வீட்டிலேயே பணத்தை சேமித்து வைத்து பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் சில இடங்களில் வருமான வரித் துறை (Income Tax Department) சோதனைகள் நடத்தி பெரிய அளவிலான பணத்தை பறிமுதல் செய்த செய்திகளையும் நாம் காண்கிறோம். இதுபோன்ற சூழ்நிலையில், உண்மையில் வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்க முடியும்? சட்டம் என்ன சொல்கிறது? என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
நம் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?
வீட்டில் பணத்தை வைத்திருப்பதற்கு வருமான வரித் துறை எந்த வரம்பையும் நிர்ணயிக்கவில்லை. சிறிய அளவில் இருந்தாலும் கோடிக்கணக்கில் பெரிய அளவில் இருந்தாலும் பணத்தை வீட்டில் வைத்திருப்பது சட்டவிரோதமானது அல்ல. இருப்பினும், அந்தப் பணத்துக்கு சரியாக கணக்கு காண்பிக்க வேண்டும். நம்மிடம் இருக்கும் பணத்துக்கு சட்டப்பூர்வமான ஆதாரங்களை வைத்திருக்க இருக்க வேண்டும்.
இதையும் படிக்க : ஆண்டுக்கு வெறும் ரூ.565 செலுத்தினால் போதும்.. ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெறலாம்!




வீட்டில் வைத்திருக்கும் பணம் உங்கள் மாத சம்பளம், தொழிலில் கிடைக்கும் லாபம் அல்லது சட்டப்பூர்வ பரிவர்த்தனையின் ஒரு பகுதி என்பதை நீங்கள் நிரூபிக்க முடிந்தால், எவ்வளவு பெரிய தொகையையும் நீங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்திருக்கலாம். வருமான ஆதாரத்தை நிரூபிக்க முடியாதபோது சிக்கல்கள் எழுகின்றன.
வருமான வரிச் சட்டம் என்ன சொல்கிறது?
வருமான வரிச் சட்டத்தின் பிரிவுகள் 68 மற்றும் 69B பணம் மற்றும் சொத்து தொடர்பான விதிகளை விளக்குகின்றன.
- வருமான வரிச் சட்டம் பிரிவு 68, உங்கள் வங்கி பாஸ்புக்கில் ஒரு தொகை குறிப்பிடப்பட்டு, அந்த தொகை எங்கிருந்து வந்தது என்பதை உங்களால் விளக்க முடியாவிட்டால், அது உரிமை கோரப்படாத வருமானமாகக் கருதப்படுகிறது.
- வருமான வரிச் சட்டம் பிரிவு 69ன் படி உங்களிடம் பணம் அல்லது முதலீடுகள் இருந்து அதற்கு சரியான கணக்கு காண்பிக்க முடியாவிட்டால், அது கணக்கில் வராத வருமானமாகக் கருதப்படுகிறது.
- வருமான வரிச் சட்டம் பிரிவு 69Bன் படி உங்கள் வருமானத்தை விட அதிகமான சொத்துக்கள் அல்லது பணம் உங்களிடம் இருந்தால், அவை எப்படி வந்தது என்பதை விளக்க முடியாவிட்டால், நீங்கள் அதற்கான வரியை அபராதங்களுடன் செலுத்த வேண்டிய தேவை ஏற்படலாம்.
இதையும் படிக்க : கிரெடிட் கார்டு பயனர்களுக்கு அதிர்ச்சி.. இனி இந்த தேவைக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்த முடியாது.. ஆர்பிஐ முக்கிய உத்தரவு!
வருமான வரித்துறையின் படி நம் வீட்டில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். ஆனால் அதற்கு சரியான ஆதாரங்கள் சமர்பிக்க வேண்டி வரலாம். பொதுவாக மக்களின் வங்கி கணக்குகளை வருமானவரித்துறை கண்காணித்து வருகிறது. நம் கணக்கில் அளவுக்கு அதிகமான தொகை செலுத்தப்படும்போது அது குறித்து வருமான வரித்துறை கேள்வி எழுப்பலாம். அப்போது நாம் ஆதாரங்களை சமர்பிக்காவிட்டால் சட்ட சிக்கலுக்கு உள்ளாக நேரிடும்.