Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Post Office Scheme : அஞ்சலக சேமிப்பு திட்டங்களின் வட்டி மாறுது.. மத்திய நிதியமைச்சகம் சொன்ன முக்கிய தகவல்!

Post Office Savings Scheme Interest Rates | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தான் அந்த சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்ய உள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Post Office Scheme : அஞ்சலக சேமிப்பு திட்டங்களின் வட்டி மாறுது.. மத்திய நிதியமைச்சகம் சொன்ன முக்கிய தகவல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Sep 2025 15:25 PM IST

பொதுமக்களின் நலனுக்காக அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு (Saving) மற்றும் முதலீட்டு (Investment) திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மிகவும் பாதுகாப்பான திட்டங்களாக இவை உள்ள நிலையில், ஏராளமான பொதுமக்களும் இந்த திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த நிலையில், அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் (Post Office Saving Schemes) குறித்து அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, செப்டம்பர் 30, 2025 முதல் அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அது குறுத்து விரிவாக பார்க்கலாம்.

அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்

பொதுமக்கள் பாதுகாப்பான வகையில் சேமிப்பு மற்றும் முதலீடு செய்யும் விதமாக அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான திட்டங்களை செயலபடுத்தி வருகிறது. பொது வருங்கால வைப்பு நிதி (PPF – Public Provident Fund), தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC – National Savings Certificate), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS – Senior Citizen Saving Scheme), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY – Sukanya Samriddhi Yojana), அஞ்சலக சேமிப்பு கணக்கு (POSA – Post Office Savings Account), கிசான் விகாஸ் பத்ரா திட்டம் (KVP – Kisan Vikas Patra), அஞ்சலக மாத வருமான திட்டம், நிலையான வைப்பு நிதி திட்டம் (FD – Fixed Deposit) ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க : FD Schemes : 7.15 சதவீதம் வரை வட்டி.. அதிக பலன்களுடன் கூடிய எஸ்பிஐ-ன் எப்டி திட்டங்கள்!

இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை கடந்த காலாண்டு அரசு மாற்றம் செய்யாமலே விட்டுவிட்டது. இதன் மூலம் ஆறாவது காலாண்டாக இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லாமல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் தான் அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் செய்வது குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள்

  • பெண் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டமாக உள்ள சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
  • பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
  • மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

இந்த திட்டங்களின் வட்டி விகிதங்கள் மாற்றப்படாமலே உள்ள நிலையில், செப்டம்பர் 30, 2025 அன்று அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் வர உள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.