Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Moto 06 Power : மோட்டோ 06 பவர் ஸ்மார்ட்போனுக்கு ரூ.3,000 வரை தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!

Moto G6 Power Smartphone Gets Huge Discount | தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்சாதன பொருட்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், மோட்டோ 06 பவர் ஸ்மார்ட்போனுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்குகிறது. அதன் மூலம் ரூ.3,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Moto 06 Power : மோட்டோ 06 பவர் ஸ்மார்ட்போனுக்கு ரூ.3,000 வரை தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!
மோட்டோ 06 பவர்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 19 Oct 2025 16:03 PM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் இ காமர்ஸ் நிறுவனங்கள் பல வகையான அசத்தல் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. பல நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் பிளிப்கார்ட் நிறுவனமும் தனது பிளிப்கார்ட் பிக் பேங்க் தீபாவளி சேலை (Flipkart Big Bang Diwali Sale) அறிவித்துள்ளது. இந்த சேலில் மோட்டோ 06 பவர் (Moto 06 Power) ஸ்மார்ட்போனுக்கு ரூ.3 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுதவிர எக்ஸ்சேஞ் சலுகையும் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், மோட்டோ 06 பவர் ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட்டில் கிடைக்கும் சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி குறித்து விரிவாக பார்க்கலாம்.

மோட்டோ 06 பவர் ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட்டில் அசத்தல் தள்ளுபடி

4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த மோட்டோ 06 பவர் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் வெறும் ரூ.7,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தீபாவளி சலுகையாக வெறும் ரூ.7,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.2,000 வரை பணத்தை சேமிக்க முடியும். இதுதவிர இந்த ஸ்மார்ட்போனுக்கு வங்கி சலுகை வழங்கப்படுகிறது. அதன் மூலம் ரூ.300 சேமிக்கலாம். இதுதவிர இந்த ஸ்மார்ட்போனுக்கு எக்ஸ்சேஞ் சலுகை வழங்கப்படுகிறது. அதன் மூலம் ரூ.5,450 பெற முடியும்.

இதையும் படிங்க : Oppo Find X Series : ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் சீரீஸில் அறிமுகமான இரண்டு அசத்தல் ஸ்மார்ட்போன்கள்!

மோட்டோ 06 பவர் – சிறப்பு அம்சங்கள் என்ன?

இந்த ஸ்மார்ட்போன் 6.88 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹெலியோ ஜி81 எஸ்க்ட்ரீம் (MediaTek Helio G81 Extreme) அம்சத்தை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 15 ஐ மையமாக கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக ஸ்டோரேஜை 1 டிபி வரை அதிகரிக்கலாம்.

இதையும் படிங்க : BSNL : தீபாவளிக்கு இரண்டு அசத்தல் அம்சங்களை அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எல்.. என்ன என்ன தெரியுமா?

இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் 50 மெகா பிக்சல் பிரைமரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 18 வாட்ஸ் வரை சார்ஜிங் சப்போர்ட் செய்யும் நிலையில், 7,000 mAh பேட்டரி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை மிக குறைந்த விலையில் வாங்க இது சரியான தேர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.