Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

30 ஆண்டுகளில் இயற்கை பேரழிவுகளால் இந்தியாவில் 80,000 பேர் பலி.. காலநிலை அபாய குறியீடு வெளியிட்ட அறிக்கை!

India's Natural Disaster Crisis | உலக அளவில் அதிக இயற்கை பேரழிவுகளை சந்திக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்த நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் இயற்கை பேரழிவுகளால் இந்தியாவில் சுமார் 80,000 மக்கள் பலியாகியுள்ளதாக காலநிலை அபாய குறியீடு தெரிவித்துள்ளது.

30 ஆண்டுகளில் இயற்கை பேரழிவுகளால் இந்தியாவில் 80,000 பேர் பலி.. காலநிலை அபாய குறியீடு வெளியிட்ட அறிக்கை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Nov 2025 10:19 AM IST

புதுடெல்லி, நவம்பர் 12 : உலக அளவில் இயற்கை பேரழிவுகளால் (Natural Disaster) பாதிக்கப்படும் 9வது நாடாக இந்தியா (India) உள்ளது. புயல், சுமானி, நிலநடுக்கம் என பல்வேறு இயற்கை பேரழிவுகளால் இந்தியா அவ்வப்போது கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் இந்தியா சுமார் 430 மிக கடுமையான இயற்கை பேரழிவுகளை சந்தித்துள்ளதாகவும், அவற்றின் காரணமாக இதுவரை சுமார் 80,000 மக்கள் பலியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தரவுகளை காலநிலை அபாய குறியீடு (CRI – Climate Risk Index) அமைப்பு வெளியிட்டுள்ளது.

1.3 பில்லியன் மக்களை பாதித்துள்ள இயற்கை பேரழிவுகள்

2026 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை காலநிலை அபாய குறியீடு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், 1995 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை காலநிலை பேரழிவுகளால் சுமார் 1.3 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது. புவி வெப்ப மயமாதல் காரணமாக  தொடர் வெள்ள பாதிப்புகள், சுனாமி மற்றும் வெப்ப அலைகள் ஆகியவற்றை சந்தித்து வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது. குறிப்பாக 1998 குஜராத் புயல், 1999 ஒடிசா புயல் மற்றும் 2013 உத்தரகாண்ட் ஆகியவை அபாய குறியீடு அமைப்பின் அறிக்கையில் இந்தியாவை முக்கிய இடத்தை பிடிக்க வழிவகை செய்துள்ளதாக கூறியுள்ளது.

இதையும் படிங்க : டெல்லி குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் – பிரதமர் மோடி உறுதி

தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை பெறும் இந்தியா

தொடர்ச்சியான வானிலை மாற்றங்கள் காரணமாக இந்தியாவின் நிலை தனிமைப்படுத்தப்பட்ட பேரழிவுகளை விட தொடரச்சியான அச்சுறுத்தல்களை பெறுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் உள்ள அதிக மக்கள் தொகை, மழைக்கால மாற்றங்கள் ஆகியவை இணைந்து ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு மட்டும் இந்தியா மிக கடுமையான பருவமழை, வெள்ளம் ஆகியவற்றை எதிர்கொண்டது. அந்த ஆண்டில் மட்டும் சுமார் 8 மில்லியன் மக்கள் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டனர். அவற்றில் குஜராத், மகாராஷ்டிரா, திரிபுரா ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர் என்று அறிக்கை கூறுகிறது.

இதையும் படிங்க : சயனைடை விட 6,000 மடங்கு ஆபத்தான் ரைசின்.. பயங்கரவாதிகள் தீட்டிய சதி திட்டத்தை முறியடித்த ஏடிஎஸ்!

உலக அளவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய 9,700 இயற்கை பேரழிவுகள்

1995 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில் உலக அளவில் சுமார் 9,700 இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக சுமார் 8.3 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. இந்த பேரழிவுகளால் சுமார் 5.7 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதானல் சுமார் 4.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.