சயனைடை விட 6,000 மடங்கு ஆபத்தான் ரைசின்.. பயங்கரவாதிகள் தீட்டிய சதி திட்டத்தை முறியடித்த ஏடிஎஸ்!
Gujarat Ricin Terror Plot Foiled | கடந்த சில நாட்களுக்கு முன்பு பயங்கரவாதத்துடன் தொடர்புடைய மூன்று நபர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் உயிர்க்கொல்லும், மிகவும் ஆபத்தான ரைசின் என்ற உயிரியல் ஆயுதத்தை உருவாக்கி வந்தது தெரிய வந்துள்ளது.
குஜராத், நவம்பர் 11 : குஜராத்தில் (Gujarat) பயங்கரவாதத்துடன் தொடர்புடைய மூன்று நபர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு (ATS – Anti Terrorist Squad) அதிகாரிகள் கைது செய்த சம்பவம் நாட்யையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த மூவரும் மிக பயங்கரமான ரைசினை (Ricin) உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாக ஏடிஎஸ் கூறுகிறது. இந்த ரைசின் சயனைடை விட சுமார் 6,000 மடங்கு கொடிய நஞ்சு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த உயிர்க்கொல்லி நஞ்சு சர்வதேச அளவில் வேதியல் மற்றும் உயிரியல் நிபுணர்களால் கட்டுப்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூவரும் உயிர்க்கொல்லும் கொடூர உயிரியல் ஆயுதங்களை தயார் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர் என அறிக்கைகள் கூறுகிறது. இந்த நிலையில், அந்த மூவரை கைது செய்ததன் மூலம் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான இஸ்லாமிய அரசு கோரசன் மாணாகத்துடன் (IKSP – Islamic State Khorasan Province) தொடர்புடைய பயங்கர சதி முறியடிக்கப்பட்டுள்ளது.
ரைசின் என்றால் என்ன, அது எத்தைய கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்?
ரைசின் என்பது ஆமனக்கு விதையில் (Castor Seeds) இருந்து எடுக்கப்படும் ஒரு வகையான நச்சுத்தன்மை வாய்ந்த மிகவும் ஆபத்தான புரதமாகும். ஆமனக்கு விதையில் இருந்து எண்ணெய் எடுத்த பிறகு மீதமிருப்பவை தேவையற்ற ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், அது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் கொடூர விஷ தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. மருத்துவ அறிக்கைகளின் படி இந்த ஆமனுக்கு கொட்டையில் இருந்து எடுக்கப்படும் ரைசினுக்கு இருக்கும் நச்சுத்தன்மையை குணப்படுத்த எந்த வித மருத்துகளும் இல்லை என கூறப்படுகிறது. இந்த நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்ட நபரை உயிர்ப்புடன் வைத்துக்கொள்வதற்காக ஆக்சிஜன், திரவு உணவுகள் ஆகியவை கொடுக்க முடியுமே தவிர இந்த நச்சுத்தன்மையை மனித உடலில் இருந்து நீக்க முடியாது என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : Delhi Blast: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடிகுண்டு விபத்து.. இன்று ஒரு நாள் சாந்தினி சௌக் சந்தை மூடப்படும் என அறிவிப்பு




மனித உடலுக்குள் சென்றால் நிச்சயம் உயிரிழப்பை ஏற்படுத்தும்
ரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் (OPCW – Organisation for the Prohibition of Chemical Weapons) கூற்றுப்படி, இந்த ரைசின் ரசாயன் மாநாட்டின் அட்டவணை ஒன்றின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. காரணம் இந்த ரைசின் மனித உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தப்பட்டாலோ அல்லது மனிதர்கள் விழுங்கினாலோ அது அவர்களை கொல்லக்கூடும். இந்த ரைசின் தோல் வழியாக உடலுக்கு அவ்வளவு எளிதாக செல்ல முடியாது. காரணம் தோலில் உள்ள வெப்பம் அதனை எளிதாக அழித்துவிடும். ஒருவேளை அது தண்ணீரில் கலக்கிறது என்றால் பலவீனமடைந்துவிடும். இவற்றை தாண்டி அது மனித உடலுக்குள் செலுத்தப்படும் பட்சத்தில் நிச்சயம் உயிரிழப்பை ஏற்படுத்தும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.