Delhi Blast: டெல்லி கார் வெடிகுண்டு விபத்து.. பிரதமர் மோடி இரங்கல்..
டெல்லியில் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “இன்று மாலை டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்,” என தெரிவித்துள்ளார்.
டெல்லி, நவம்பர் 10, 2025: டெல்லியில் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “இன்று மாலை டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்,” என தெரிவித்துள்ளார். டெல்லி செங்கோட்டையில் இன்று மாலை 7 மணி அளவில் சிக்னலில் நின்று கொண்டிருந்த ஹூண்டாய் i20 கார் தீப்பற்றி எரிந்து வெடித்தது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. குண்டுவெடிப்பு செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே நடந்துள்ளது.
அனைத்து கோணங்களிலும் விசாரணை தீவிரம்:
இந்த குண்டுவெடிப்பில் ஆறு கார்கள், இரண்டு மின் வாகனங்கள் மற்றும் ஒரு ஆட்டோ சம்பவ இடத்திலேயே எரிந்து முற்றிலுமாக சேதமடைந்தன. இந்த சம்பவம் தொடர்பாக NIA உள்ளிட்ட பல்வேறு விசாரணைக் குழுக்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், “ அருகிலுள்ள அனைத்து CCTV கேமராக்களையும் ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி CP மற்றும் சிறப்புப் பிரிவு பொறுப்பாளரிடமும் நான் பேசியுள்ளேன். டெல்லி CP மற்றும் சிறப்புப் பிரிவு பொறுப்பாளர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர். நாங்கள் அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருகிறோம், மேலும் முழுமையான விசாரணையை மேற்கொள்வோம்.” என குறிப்பிட்டுள்ளார்.
பிரதாமர் மோடி இரங்கல்:
Condolences to those who have lost their loved ones in the blast in Delhi earlier this evening. May the injured recover at the earliest. Those affected are being assisted by authorities. Reviewed the situation with Home Minister Amit Shah Ji and other officials.@AmitShah
— Narendra Modi (@narendramodi) November 10, 2025
அதே சமயத்தில் பிரதமர் மோடியும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது பதிவில், “ இன்று மாலை டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜி மற்றும் பிற அதிகாரிகளுடன் நிலைமையை மதிப்பாய்வு செய்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.