Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்தில் வாக்கு திருட்டு மூலம் பாஜக ஆட்சியை பிடிக்க திட்டம்…தொல். திருமா அட்டாக்!

BJP Planning To Seize Power In Tamil Nadu: வாக்கு திருட்டு மூலம் பீகாரில் ஆட்சியை பிடித்தது போல தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதற்காக பாரதீய ஜனதா கட்சி முயன்று வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

தமிழகத்தில் வாக்கு திருட்டு மூலம் பாஜக ஆட்சியை பிடிக்க திட்டம்…தொல். திருமா அட்டாக்!
வாக்கு திருட்டு மூலம் ஆட்சியை பிடிக்க முயலும் பாஜக
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 12 Dec 2025 14:00 PM IST

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பாக எதிர்க் கட்சிகள் சார்பில் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். வாக்குத் திருட்டு சம்பவங்களால் பீகாரில் பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றி வாய்ப்பை தந்திருக்கிறது. 47 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த 47 லட்சம் பேரில் ஒருவர் கூட அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு ஊடுருவி வந்தவர்கள் கிடையாது. இந்த நாட்டு குடிமக்களின் வாக்குரிமையை பறிக்கக்கூடிய நடவடிக்கையாக எஸ் ஐ ஆர் திருத்தப்பணிகள் அமைந்துள்ளது.

தமிழகத்தில் ஒரு கோடி பேரின் வாக்குரிமை பறிக்கும் அச்சம்

எதற்காக இந்த நாட்டு மக்களின் வாக்குரிமையை பறித்து, அவர்களின் குடியுரிமையை பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்று தெரியவில்லை. இதேபோல, தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் எஸ் ஐ ஆர் பணிகளை தேர்தல் ஆணையம் மூலம் மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி பேரின் வாக்குரிமை பறிக்கப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி அவர்களின் குடியுரிமையும் பறிக்கப்படும் நிலை உள்ளது.

மேலும் படிக்க: எஸ்ஐஆர்-இல் மீண்டும் குளறுபடி…ஆள் இல்லாத கிராமத்தில் 800 பேர் இருப்பதாக பதிவு!

தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை

இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்க முடியாமல் மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவற்றையெல்லாம் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ளோம். இதனை ஆளும் மத்திய பாஜக அரசு ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது கவலை அளிக்கிறது. ஜனநாயக சக்திகள் விழிப்புடன் இருக்க வேண்டும். குடிமக்களின் வாக்குரிமை மட்டுமின்றி குடியுரிமையும் பறிக்கின்ற ஆபத்தான அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.

வாக்கு திருட்டு மூலம் ஆட்சியை பிடிக்க திட்டம்

பீகாரில் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றதை போல, தமிழகத்திலும் வெற்றி பெறுவதற்கு பாஜக அரசு முயன்று வருகிறது. தமிழக மக்களின் ஆதரவு இன்றி ஆட்சியைப் பிடிப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா எப்படி கூறுகிறார் என்று தெரியவில்லை. எஸ் ஐ ஆர் நடவடிக்கையின் மூலம் எதிர்ப்பு வாக்குகளை பட்டியலில் இருந்து வெளியேற்றிவிட்டு பாஜக வெற்றி பெற முயற்சிக்கிறது.

ஆட்சியை பிடிப்பதற்காக திருப்பரங்குன்றம் விவகாரம்

தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகளை அமல்படுத்துவது மாநில அரசின் கடமையாகும். இதனால், திமுக அரசு ஒருபுறம் எஸ் ஐ ஆர் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு, மறுபுறம் ஆதரவு தெரிவிப்பதாக நினைத்துவிடக் கூடாது. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைப்பதற்காக திருப்பரங்குன்றம் விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. ஜி. ஆர். சுவாமிநாதனுக்கு வழக்குகள் ஒதுக்குவதை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நிறுத்தி வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: ஈரோடு செல்லும் விஜய்…தேதி…நேரம்…குறித்த செங்கோட்டையன்!