AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஈரோட்டில் ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட எருமை மாடு.. அப்படி என்ன சிறப்பு!

Jafarbadi Buffalo Sold For 5 Lakh Rupees In Erode | கிராமங்களில் வார சந்தை, திருவிழாக்களின்போது சந்தை போடுவது உள்ளிட்டவை வழக்கமாக உள்ளது. அந்த வகையில், ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியில் திருவிழா சந்தையில் எருமை மாடு ஒன்று ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஈரோட்டில் ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட எருமை மாடு.. அப்படி என்ன சிறப்பு!
ஜாஃப்ராபாதி எருமை
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Aug 2026 07:14 AM IST

ஈரோடு, ஆகஸ்ட் 17 : ஈரோட்டில் (Erode) திருவிழா சந்தையில் எருமை மாடு ஒன்று ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த எருமை ஜாஃப்ராபாதி (Jafarbadi) வகையை சேர்ந்தது. இந்த எருமை மாடுகள் தங்களின் பெரிய உடல் அமைப்பு மிகவும் பெயர் போனவை. இந்தியாவில் உள்ள எருமை மாடுகளில் இது சற்று சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த நிலையில் தான், இந்த எருமை மாடு ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த எருமை விற்பனை குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட எருமை

திருவிழாக்களின் போதும், வார சந்தைகளின் போதும் ஆடு, மாடும் கோழி உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், ஈரோடு மாவட்டம், அந்தியூர், குருநாதசாமி கோயில் திருவிழாவில் எருமை மாடு ஒன்று ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜாஃப்ராபாதி வகையை சேர்ந்த எருமை மாடு தான் இத்தகைய அதிக மதிப்புக்கு விற்பனையாகியுள்ளது.

இதையும் படிங்க : டெல்லியில் 3 ஆண்டுகள் பணியாற்ற சொன்ன அமித் ஷா – அண்ணாமலை சொன்ன பரபரப்பு தகவல்

ஜாஃப்ராபாதி எருமை மாடு – அப்படி என்ன சிறப்பு உள்ளது?

ஜாஃப்ராபாதி என்பது குஜராத் மாநிலம், கத்தைவார் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற எருமை இனங்களில் ஒன்றாகும். இந்த வகை மாடுகள் அதிக பால் உற்பத்தி மற்றும் நல்ல கொழுப்பு சத்து மிக்க பாலை கொடுப்பதன் காரணமாக மிகவும் புகழ்பெற்றவையாக உள்ளன. இதுதவிர இந்த எருமை மாட்டின் தோற்றமும் மிகவும் புகழ்பெற்றதாகும்.

இதையும் படிங்க : 3 தமிழர்கள் மரணம் – இதிலும் வாய்மூடி இருக்காமல்… – தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

அத்தகைய பல்வேறு சிறப்புகள் மிக்க ஜாஃப்ராபாதி எருமை மாடு, ஈரோடு சந்தையில் விற்பனை செய்யப்பட்ட போது கேரளாவை சேர்ந்த ஒருவர் அதனை ரூ.5 லட்சம் கொடுத்து வாங்கிச் சென்றுள்ளார். தற்போது இதுதான் இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

Follow Us