கோவில் நிலங்களில் மின் உற்பத்தி – தமிழக அரசின் புதிய திட்டம்
Temple Land Solar Project : தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் சோலார் பேனல்களை பொருத்தி மின் உற்பத்தி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக கோவில் நிலங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
சென்னை, ஆகஸ்ட் 16 : தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் சோலார் பேனல்களை பொருத்தி மின் உற்பத்தி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேளாண் பணிகள் எதுவும் நடைபெறாத நிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக ஆட்சியமைந்த பிறகு கோவில் நிலங்கள் குறித்த சர்ச்சைகள் எழுந்த நிலையில் தமிழக அரசின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கோவில் நிலங்களில் மின் உற்பத்தி
இது தொடர்பாக கடந்த ஜூலை, 2026 மாதம் இந்து சமய அறிநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த திட்டம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைவரது ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி 10 ஏக்கர் மற்றும் அதற்கு மேற்பட்ட நிலங்கள் கண்டறியப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த நிலையில் அந்த நிலங்களில் சூரிய மின் சாதனங்கள் அமைத்து மின் உற்பத்தி செய்து மின் வாரியத்துக்கு வழங்குவதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : போதைப்பொருள் குறித்து தகவல் தெரிவித்ததால் மாணவர் மரணம்…. குடியரசுத் துணைத் தலைவர் வருத்தம்




மேலும் இந்த திட்டத்தின் மூலம் கோவில் நிலமும் பாதுகாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கோவில் நிலங்களை வேலி அமைத்து பாதுகாக்க அறிவிறுத்தப்பட்டுள்ளது. பழனி கேவில் நில விவகாரம் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில விவகாரம் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் தமிழக அரசின் இந்த முடிவு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழகத்தின் கோவில் நிலங்கள் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் அதனை பயன்படுத்தி சிலர் முறைக்கேட்டில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பலர் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து கோவில் விவரங்களை சேகரித்து இணையதளத்தில் வெளியிடுமாறு இந்து அறநிலையத்துறை அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : “100 ஆண்டா வாழ்ந்த மக்களை ஆக்கிரமிப்புன்னு சொல்றதா?”.. சீமான் கொந்தளிப்பு!
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்கை திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்து பத்திரப்பதிவு செய்ததாக மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.