AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

3 தமிழர்கள் மரணம் – இதிலும் வாய்மூடி இருக்காமல்… – தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

MK Stalin Seeks CM Vijay’s Response : கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

3 தமிழர்கள் மரணம் – இதிலும் வாய்மூடி இருக்காமல்… – தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
முதல்வர் விஜய் - மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Aug 2026 17:50 PM IST

கர்நாடக மாநிலம், ஹனூர் வனப்பகுதியில் வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுடப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் சுட்டதில் வனத்துறை ஊழியர் சிவராஜிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களில் மரியமங்களா கிராமத்தை சேர்ந்த அந்தோணி சுவாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.

கர்நாடகாவில் 3 தமிழர்கள் மரணம்

இந்த நிலையில் மான்களை வேட்டையாடியதாகவும், அவர்களை கைது செய்யும் முயற்சியில் அவர்கள் வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர்களது 3 பேரின் உடல்களும் மைசூரில் உள்ள கே.ஆர். மருத்துவமனையில் வைக்கபபட்டுள்ளது. இதற்கிடையில் துப்பாக்கி சூட்டில் பலி யானவர்களின் உடல்களை வாங்க மறுத்து இன்று 2வது நாளாகவும் போராட்டம் நடந்து வருகிறது. இதனையடுத்து சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கர்நாடக வனத்துறை சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ மறு வழக்குப்பதிவு.. சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை!

தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

 

இந்த சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.

குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாகத் தெரிகிறது. அது தவிர்க்கப்பட்டு, இதனைக் கொலை வழக்காகப் பதிந்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடைபெற்று இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனி இப்படி ஒரு குற்றத்தில் ஈடுபடும் துணிச்சல் எவருக்கும் வராது.

இதையும் படிக்க : கோவையில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தப்பிய வடமாநிலப் பெண்.. பீதியில் பொதுமக்கள்.. கைதான கும்பலின் வேலையா?

மேகதாது விவகாரம் போல இதிலும் வாய்மூடி இருக்காமல், இச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்குத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us