ஜெய்ஸ்வாலின் ரன் அவுட் சர்ச்சை – சுயநலமாக செயல்பட்ட கே.எல்.ராகுல்? வைரலாகும் வீடியோ
Jaiswal Rahul Run Out Row : இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு மொத்தம் 450 ரன்களைக் குவித்தது. இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் ரன் அவுட்டானது சர்ச்சையாக மாறியிருக்கிறது.
காலே நகரில் ஆகஸ்ட் 16, 2026 நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு மொத்தம் 450 ரன்களைக் குவித்தது. இதில் தேவ்தத் படிக்கல் 167 ரன்களும், ஜூரல் 51 ரன்களும் எடுத்தனர். இந்த நிலையில் இந்த போட்டியில் தனது ரன் அவுட் விவகாரம் தொடர்பாக சக வீரர் கே.எல். ராகுல் மற்றும் இலங்கை கேப்டன் தனஞ்சய டி சில்வா ஆகியோரிடம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கோவமாக நடந்துகொண்டதாக தகவல் பரவி வருகின்றன.
இலங்கை மண்ணில் இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க காலே சர்வதேச மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் மழையைப் பொழிந்து வருகின்றனர். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 460 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது. துவக்கம் முதலே இலங்கை பந்துவீச்சாளர்களுக்குக் கடும் சவாலாகத் திகழ்ந்த இளம் வீரர் தேவ்தத் படிக்கல்,ரன்களை குவிக்கத் தொடங்கினார். சிறப்பாக ஆடிய அவர், 167 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.




இதையும் படிக்க : Team India: தலைமை தேர்வாளராக தொடர்வாரா அகர்கர்..? பிசிசிஐ எடுக்கப்போகும் முக்கிய முடிவு!
ஜெய்ஸ்வாலின் ரன் அவுட் சர்ச்சை
The one blip in an otherwise smooth session for India!
Yashasvi Jaiswal was run out after a mix-up with KL Rahul 🥲#SLvINDpic.twitter.com/ZJIc0zjh3U
— Cricbuzz (@cricbuzz) August 15, 2026
இந்த போட்டியில் கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் முழுவதும் ஒரு ரன்-அவுட் சர்ச்சை மீதே இருந்தது. இன்னிங்ஸின் ஆரம்பத்தில், கே.எல். ராகுல் அடித்த பந்தை நிறுத்த முயன்ற இலங்கை பந்துவீச்சாளர் கேஷவா, முன்னோக்கி ஓடிவந்து, ரன் ஓடத் தொடங்கியிருந்த ஜெயஸ்வால் மீது பலமாக மோதினார். இதனால் துடுமாறி ஜெயஸ்வால்,கீழே விழுந்தார். அதன்பின் ஏற்பட்ட குழப்பத்தில், அவரால் சரியான நேரத்திற்குள் கிரீஸை அடைய முடியவில்லை. இதனால் துரதிர்ஷ்டவசமாக அவர் தனது விக்கெட்டை இழந்தார். இந்தச் சம்பவம் மைதானத்தில் இருந்த பார்வையாளர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையும் படிக்க : IND vs SL: காயத்தால் பாதியில் வெளியேறிய கே.எல்.ராகுல்.. தொடர்ந்து விளையாடுவாரா?
அந்த நேரத்தில் ஜெய்ஸ்வால் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ஜெய்ஸ்வால் கீழே விழுந்து வலியால் துடித்தபோதும், அதைப் பொருட்படுத்தாமல் ராகுல் சுயநலத்துடன் ரன் எடுக்க ஓடியதே தனது ரன் அவுட்டிற்குக் காரணம் என்று அவர் வேதனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. ராகுலின் தவறால் விக்கெட்டை இழந்தது முற்றிலும் நியாயமற்றது என்றும், வெறும் 32 ரன்களில் ஆட்டமிழந்தது தன்னை மிகுந்த மனவேதனைக்குள்ளாக்கியது என்றும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.