AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SL: காத்திருந்த கங்குலி சாதனை.. சதம் அடித்து சமன் செய்த தேவ்தத் படிக்கல்..!

Devdutt Padikkal Century: தேவ்தத் படிக்கல் 134 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடித்து தனது சதத்தை நிறைவு செய்தார். இம்முறை அவரது ஸ்டிரைக் ரேட் 74.63 ஆக இருந்தது. தேவ்தத் படிக்கல் தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ளார். போட்டி நடைபெறும் காலி பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.

IND vs SL: காத்திருந்த கங்குலி சாதனை.. சதம் அடித்து சமன் செய்த தேவ்தத் படிக்கல்..!
தேவ்தத் படிக்கல்Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 15 Aug 2026 17:38 PM IST

காலி சர்வதேச மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு (IND vs SL) இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் தேவ்தத் படிக்கல் அபாரமாக விளையாடி, இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். இந்திய அணிக்காக (Indian Cricket Team) மூன்றாவது வீரராகக் களமிறங்கிய படிக்கல், 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் சதம் அடித்தார். இது தேவ்தத் படிக்கலின் முதல் டெஸ்ட் சதமாகும். இந்த சதத்தின் மூலம் படிக்கல் சரித்திரம் படைத்துள்ளார். இது இந்திய அணி 200 ரன்களை கடக்க உதவியது. அதேநேரத்தில், கே.எல்.ராகுல் 77 ரன்கள் எடுத்து ரிட்டயர்ட் ஹர்ட் மூலம் வெளியேறினார்.

ALSO READ: 5 நாட்களில் 4 நாளில் மழைக்கு வாய்ப்பு.. குறுக்கே வந்து இந்தியா – இலங்கை போட்டிக்கு தடையா?

தேவ்தத் படிக்கல் வரலாறு:


இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து தேவ்தத் படிக்கல் வரலாறு படைத்தார். 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்காக சதம் அடித்த இரண்டாவது இடது கை பேட்ஸ்மேன் என்ற பெருமையை படிக்கல் பெற்றார். 2002-ல் டெல்லியில் ஜிம்பாப்வேக்கு எதிராக 136 ரன்கள் எடுத்த சௌரவ் கங்குலிக்குப் பிறகு, 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்காக 3-வது இடத்தில் பேட்டிங் செய்து டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த இரண்டாவது இடது கை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் ஆவார்.

வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட படிக்கல்:

தேவ்தத் படிக்கல் 134 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடித்து தனது சதத்தை நிறைவு செய்தார். இம்முறை அவரது ஸ்டிரைக் ரேட் 74.63 ஆக இருந்தது. தேவ்தத் படிக்கல் தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ளார். போட்டி நடைபெறும் காலி பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. இருப்பினும், தேவ்தத் படிக்கல் இந்த பிட்ச்சில் சிறப்பாகச் செயல்பட்டு ஒரு சதமும் அடித்தார். டெஸ்ட் தொடருக்கு முன்பு, காயம் காரணமாக சாய் சுதர்ஷனால் விளையாட முடியாது என்பது தெளிவாகியது. அதன் பிறகு, 3வது இடத்திற்கு தேவ்தத் படிக்கல் தேர்ந்தெடுக்கப்பட்டார். படிக்கல் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்து சதம் அடித்த கடைசி இந்திய வீரர் சுப்மன் கில் ஆவார். கில் 2024 செப்டம்பரில் சென்னையில் வங்கதேசத்திற்கு எதிராக இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

ALSO READ: 600வது டெஸ்டில் களம்.. இந்தியாவிற்கு எதிராக அதிக முறை ஆதிக்கம் செலுத்தியது யார்??

படிக்கல் பயிற்சி ஆட்டத்திலும் சதம்:

முன்னதாக, தேவ்தத் படிக்கல் இலங்கை XI அணிக்கு எதிராக 3-வது இடத்தில் பேட்டிங் செய்து ஒரு அற்புதமான சதத்தை அடித்திருந்தார். 3 நாள் பயிற்சிப் போட்டியில், தேவ்தத் படிக்கல் 164 பந்துகளில் 142 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Follow Us