AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SL: காயத்தால் பாதியில் வெளியேறிய கே.எல்.ராகுல்.. தொடர்ந்து விளையாடுவாரா?

KL Rahul Injury Update: கை மற்றும் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக கே.எல். ராகுல் வலியால் அவதிப்பட்டார். டி-பிரேக்கின் போது கே.எல்.ராகுல் பிசியோதெரபிஸ்ட்டுடன் இருந்தார், மேலும் மூன்றாவது செஷனில் பேட்டிங் செய்ய களமிறங்க முயன்றார். இருப்பினும், கடுமையான வலியின் காரணமாக, அவர் காயத்துடன் ஆட்டத்திலிருந்து விலக முடிவு செய்தார்.

IND vs SL: காயத்தால் பாதியில் வெளியேறிய கே.எல்.ராகுல்.. தொடர்ந்து விளையாடுவாரா?
கே.எல்.ராகுல்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Aug 2026 20:36 PM IST

காலி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் இந்திய அணி (Indian Cricket Team) பேட்ஸ்மேன்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. அரைசதம் அடித்து சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் (KL Rahul) சதத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இருப்பினும், மூன்றாவது செஷன் தொடங்குவதற்கு முன்பு அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் வெளியேறினார். இதையடுத்து, அவருக்குப் பதிலாக பேட்டிங் செய்ய வந்த கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill), 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ராகுல் களத்தில் இருந்து வெளியேறியபோது மிகுந்த வலியுடன் காணப்பட்டார். மேலும் ஒரு பிசியோதெரபிஸ்ட்டின் உதவியுடன் படிக்கட்டுகளில் ஏறுவது தெரிந்தது.

காலியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கைத் தீர்மானித்தார். கே.எல். ராகுலும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இன்னிங்ஸைத் தொடங்கினர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிறப்பாக விளையாடி கொண்டிருந்த யஷஸ்வி ஜெய்வால் ரன் அவுட் ஆனார். பின்னர் ராகுலும் தேவ்தத் படிக்கலும் இன்னிங்ஸை நிலைப்படுத்தி, இந்திய அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர்.

ALSO READ: காத்திருந்த கங்குலி சாதனை.. சதம் அடித்து சமன் செய்த தேவ்தத் படிக்கல்..!

கே.எல். ராகுல் காயம்


கை மற்றும் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக கே.எல். ராகுல் வலியால் அவதிப்பட்டார். டி-பிரேக்கின் போது கே.எல்.ராகுல் பிசியோதெரபிஸ்ட்டுடன் இருந்தார், மேலும் மூன்றாவது செஷனில் பேட்டிங் செய்ய களமிறங்க முயன்றார். இருப்பினும், கடுமையான வலியின் காரணமாக, அவர் காயத்துடன் ஆட்டத்திலிருந்து விலக முடிவு செய்தார். வெளியான புகைப்படங்கள் ரசிகர்களுக்கு வேதனையை கொடுத்தது. பிசியோதெரபிஸ்ட் அவரைப் பிடித்துக்கொண்டிருக்க, அவரால் படிக்கட்டுகளில் ஏறவே மிகவும் சிரமப்பட்டது.

ALSO READ: 2வது நாளில் மாறும் நேரம்.. இந்தியா – இலங்கை போட்டி எப்போது தொடங்கும்?

பிசிசிஐ விளக்கம்:

கே.எல். ராகுலின் காயம் குறித்து பிசிசிஐ தரப்பிலிருந்து தற்போது அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ கோடக், ”தேவ்தத் படிக்கல் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் தனது வாய்ப்புக்காகக் காத்திருந்தார், கிடைத்த வாய்ப்பையும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். ஒட்டுமொத்தத் தயாரிப்பு முறையும், குறிப்பாக நான் என்.சி.ஏ (NCA)-வில் இருந்தபோது அவர் மேற்கொண்ட பயிற்சிகளும் மிகச் சிறப்பாக இருந்தன. இங்கும் வலைப்பயிற்சியின் மூலம் தயாராவதற்கு எங்களுக்கு நல்ல நேரம் கிடைத்தது. கே.எல். ராகுலுக்கு உடல் முழுவதும் தசைப்பிடிப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால், இப்போது அவர் முழுமையாகக் குணமடைந்துவிட்டார்.” என்று தெரிவித்தார். காயம் காரணமாக இரண்டு வீரர்கள் (சாய் சுதர்சன் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ) ஏற்கனவே இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us