AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சாந்தனு – சீமான் கூட்டணியில்… ஒரு கைதியின் டைரி பட மோஷன் போஸ்டர் வெளியீடு!

Shanthanu Bhagyaraj And Seeman: தமிழ் மற்றும் மலையாளம் சினிமாவில் பிரபலமானவராக இருப்பவர் சாந்தனு பாக்யராஜ். இவர் தமிழில் இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில், சீமானுடன் புது படத்தில் இணைந்துள்ளார். இப்படத்திற்கு ஒரு கைதியின் டைரி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சாந்தனு – சீமான் கூட்டணியில்… ஒரு கைதியின் டைரி பட மோஷன் போஸ்டர் வெளியீடு!
ஒரு கைதியின் டைரி பட மோஷன் போஸ்டர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 16 Aug 2026 20:29 PM IST

கோலிவுட் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் எழுத்தாளராக இருந்துவந்தவர் கே.பாக்கியராஜ் (K. Bhagyaraj) . இவர் சினிமாவில் இயக்குநர், நடிகர் மற்றும் எழுத்தாளர் என பல்வேறு பணிகளை செய்திருக்கிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நல பிரச்சனையின் காரணமாக காலமானார். இவர் தனது மகனும், நடிகருமான சந்தனுவின் சினிமா வாழ்க்கையை நினைத்து பெரும் பரிதவிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. சாந்தனு பாக்கியராஜ் (Shanthanu Bhagyaraj) தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். மேலும் கடந்த 2025ம் ஆண்டில் வெளியான பல்டி (Balti) என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவிலும் நுழைந்தார். இவரின் நடிப்பில் தமிழில் புது படங்கள் வெளியாகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், தற்போது இயக்குநர் சுசீந்திரனின் (Suseenthiran) இயக்கத்தில் புது படத்தில் இணைந்துள்ளாராம்.

இதை கண்ணன் ரவி க்ரூப்ஸ் நிறுவனம் தயாரிக்க, அரசியல்வாதியும், நடிகருமான சீமான் இப்படத்தில் முக்கியமான வேடத்தக்த்தில் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இப்படத்திற்கு ஒரு கைதியின் டைட்டில் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மோஷன் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: அம்மாவின் புடவை.. அழகிய ஸ்டில்ஸ்களை பகிர்ந்த திரிஷா கிருஷ்ணன்!

சாந்தனு மற்றும் சீமானின் ஒரு கைதியின் டைரி பட மோஷன் போஸ்டர் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

கமல்ஹாசனின் பட டைட்டிலில் நடிக்கும் சந்தனு மற்றும் சீமான்:

கடந்த 1985ம் ஆண்டில் இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஒரு கைதியின் டைரி. இதில் நடிகர் கமல்ஹாசன், ரேவதி மற்றும் ராதா போன்ற நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் கதையை நடிகரும், இயக்குநருமான கே.பாக்கியராஜ் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது தந்தாகி கே பாக்கியராஜ் எழுதிய படத்தின் கதையின் டைட்டிலில் சாந்தனு தற்போது நடிக்கவுள்ளார்.

சினிமாவில் ஆர்வம் காட்டும் சீமான்:

அரசியல்வாதியும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர் தற்போது முழுமையாக அரசியலில் இறங்கிவிட்ட நிலையில், பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். மேலும் இறுதியாக 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் இவர் மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: ஜாய் கிரிசில்டாவுடன் இணைந்த மாதம்பட்டி.. மகனுக்கு மொட்டையடித்த புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ச்சி!

இதில் பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக நடித்து அசத்தியிருந்தார். அதை தொடர்ந்து தற்போது இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில், ஒரு கைதியின் டைரி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, இதன் அறிவிப்பு இன்று (16/08/2026) வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங்கும் சிறப்பாக தொடங்கும் என கூறப்படுகிறது.

Follow Us