போதைப்பொருள் குறித்து தகவல் தெரிவித்ததால் மாணவர் மரணம்…. குடியரசுத் துணைத் தலைவர் வருத்தம்
College Student Murder Case : சென்னையில் உள்ள தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், போதைப்பொருள் விற்பனை குறித்து தகவல் கொடுத்த கல்லூரி மாணவர் கொலை செய்யப்ட்டதாக செய்தியைப் படித்தேன். குடும்பத்தில் ஒருவரை இழந்ததுபோல வருந்தினேன் என்றார்.
சென்னை, ஆகஸ்ட் 16 : போதைப்பொருள் விற்பனை குறித்து தகவல் கொடுத்த கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டது வருத்தமளிப்பதாக துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷண்ன் தெரிவித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 2 நாட்கள் சுற்றுப்பயணமாக துணைக்குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகம் வந்துள்ளார். தமிழகத்திற்கு வருகை தந்த குடியரசு துணை தலைவர் சி.பி ராதாகிருஷ்ணனை அரசு சார்பாக சென்னை விமான நிலையத்தில் தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் வரவேற்றனர்.
கோவை மாணவர் மரணம் பற்றி குடியரசுத் துணைத் தலைவர் வருத்தம்
இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், உலகம் நெருக்கடியை சந்தித்தபோது நம் ஆராய்ச்சிகளை லாப நோக்கில் பயன்படுத்தக்கூடாது என்பது அரசின் எண்ணம். ஆராய்ச்சியின் உண்மையான நோக்கம் என்பது மனிதகுலத்தின் நலனுக்காக அறிவியலை பயன்படுத்துவது. இந்தியாவின் வளர்ச்சிக்கும், நாட்டின் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவதற்கும் இளைஞர்கள் மிக முக்கியமானவர்கள். இளைஞர்கள் தங்களுடைய தனிப்பட்ட வளர்ச்சியை மட்டும் பார்க்காமல், நாட்டின் வளர்ச்சியிலும் பங்களிக்க வேண்டும் என்றார்.
இதையும் படிக்க : கோவையில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தப்பிய வடமாநிலப் பெண்.. பீதியில் பொதுமக்கள்.. கைதான கும்பலின் வேலையா?




மேலும் பேசிய அவர், எவ்வளவு சாதனைகளைப் பெற்றிருந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கம் மிகவும் முக்கியமானது. தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழக இளைஞர்கள் சிறந்து விளங்குகின்றனர்.த மாணவர்களின் அறிவு தனிப்பட்ட வளர்ச்சி மட்டுமின்றி நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டும் என்றார்.
மேலும் பேசிய அவர், போதைப்பொருள் விற்பனை குறித்து தகவல் கொடுத்த கல்லூரி மாணவர் கொலை செய்யப்ட்டதாக செய்தியைப் படித்தேன். குடும்பத்தில் ஒருவரை இழந்ததுபோல வருந்தினேன். நாம் போதைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றார். முன்னதாக சட்டமன்றத்தில் கோவையில் இறந்த மாணவர் குறித்து எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பிய போது, கோஷ்டி மோதலால் மாணவர் உயிரழந்ததாக தெரிவித்தார். இந்த நிலையில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : “தமிழ்நாட்டில் பால் உற்பத்தி திடீர் சரிவு!”.. தட்டுப்பாடு உருவாகும் அபாயம்?.. முழு விவரம்!!
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சம்பத்குமார் , கோவையில் மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அமுதன் என்ற கல்லூரி மாணவர் குடும்பத்திற்கு முதற்கட்ட நிவாரண தொகையாக ரூ.6 லட்சம் வழங்குவதற்கான ஆணையும், குடும்பத்திற்கு பட்டா வழங்குவதற்கான ஆணையும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார். மேலும் இறந்த மாணவர் சகோதரருக்கு அரசு வேலைக்கான உத்திரவாதமும் வழங்கப்பட்டிருக்கிறது என்றார்.