AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுது.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்!!

Weather Update: தமிழகத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதால், இன்று முதல் ஆகஸ்ட் 21 வரை தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை 37°C வரை உயர வாய்ப்புள்ளது.

இந்த மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுது.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்!!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 17 Aug 2026 06:26 AM IST

Tamilnadu Weather Today: தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு ஓரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், வங்கக் கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வடமேற்கு வங்கக் கடல் மற்றும் மேற்கு வங்கம் வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 21, 2026 வரை பரவலாக மழைக்கு வாய்ய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பயணிகள் கவனத்திற்கு… தமிழ்நாட்டின் முக்கிய ரயில் சேவைகளில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

இன்று கனமழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில், இன்று (ஆகஸ்ட் 17) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை மழை நிலவரம்:

அதனைத்தொடர்ந்து, நாளை (ஆகஸ்ட் 18ம் தேதி) செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தொடர்ந்து, நாளை மறுநாள் ஆகஸ்ட் 19, 2026 சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை:

இன்று முதல் ஆகஸ்ட் 20ம் தேதி வரை வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும் என கூறியுள்ளது.

இதையும் படிக்க : “உதவி செஞ்ச பிறகுதான் உள்ள மம்மூட்டி சார் இருக்குறதே தெரிஞ்சிது!”.. மதுரை நெடுஞ்சாலையில் நள்ளிரவு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us