பழைய வீட்டை சீரமைக்கும்போது கிடைத்த புதையல்.. ரூ.98 கோடி மதிப்பு.. ஆச்சர்யத்தை ஏற்படுத்திய சம்பவம்!
Gold Treasure Found In Old House | பெல்ஜியத்தில் ஒரு பழைய வீட்டை சீரமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது, அந்த வீட்டில் தங்க புதையல் ஒன்று கிடைத்துள்ளது. தங்க கட்டிகள் மற்றும் நாணயங்கள் நிறைந்த அந்த புதையலின் மதிப்பு ரூ.98 கோடி என கூறப்படுகிறது.
பெல்ஜியம், ஆகஸ்ட் 17 : பெல்ஜியம் (Belgium) நாட்டில் பழைய கட்டடம் ஒன்றை சீரமைக்கும் பணி நடைபெற்றபோது, அதில் பல கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் மற்றும் நாணயங்கள் அடங்கிய புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கதைகளில் வருவதை போலவே அந்த வீட்டில் இருந்து தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், பெல்ஜியத்தில் வீட்டை சீரமைக்கும்போது தங்க புதையல் கிடைத்தது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பழைய வீட்டை சீரமைத்தபோது கிடைத்த புதையல்
கதைகளில் புதையல் குறித்து அதிகம் கூறப்படும். மண்ணுக்குள் புதையல் மறைந்திருப்பது, குகைக்குள் மறைந்திருப்பது உள்ளிட்ட கதைகளை கேட்டிருப்போம். ஆனால், பெல்ஜியத்தில் உண்மையாகவே பல கோடி மதிப்பிலான புதைய கிடைத்துள்ளது. அதாவது பெல்ஜியத்தின், டென்டர்மாண்ட் நகரில் வீட்டை புதுப்பிக்கும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது, அந்த வீட்டில் சுவற்றில் இருந்து இந்த புதையல் பெட்டகம் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க : பாகிஸ்தான்–சவுதி–துருக்கி பாதுகாப்பு ஒப்பந்தம்.. ஈரான் கொடுத்த எச்சரிக்கை – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
நூற்றுக்கணக்கான தங்க நாணயங்கள், கட்டிகள்
அந்த புதையலில் நூற்றுக்கணக்கான தங்க நாணயங்கள் மற்றும் கட்டிகள் இருந்துள்ளன. அவற்றின் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் ரூ.98 கோடி ஆகும். பெல்ஜியம் நாட்டில் புதையல்கள் குறித்து சட்டம் உள்ளது. அதாவது, இவ்வாறு புதையல் கண்டுபிடிக்கப்பட்டால் உண்மையான உரிமையாளர்கள் அல்லது வாரிசுதாரர்கள் புதையலுக்கு உரிமை கோர அனுமதி உள்ளது.
இதையும் படிங்க : காட்ஸில்லா எல் நினோ.. கடுமையான வெயில், வெப்ப அலை.. இந்தியாவில் இதன் தாக்கம் எப்படி இருக்கும்?
புதையலை உரிமைக் கோர 5 ஆண்டுகள் அவகாசம்
இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், புதையலுக்கு உரிமைக் கோர 5 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது. ஒருவேளை அந்த புதையலை உரிமை கொண்டாட யாரும் இல்லை என்றால், அந்த புதையலை கண்டுபிடித்தவருக்கு, வீட்டின் உரிமையாளருக்கும் அது பிரித்து வழங்கப்படும். அதற்கு முன்பாக அந்த புதையலுக்கு பின்னால் எந்தவித குற்ற வழக்கும் இல்லை என்பதை காவல்துறை உறுதி செய்யும். அதன் பிறகு தான் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.