AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழ்நாட்டில் நாளை இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Rain Alert : வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் பிப்ரவரி 4, 2026 அன்று லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் நாளை இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 03 Feb 2026 19:32 PM IST

சென்னை, பிப்ரவரி 3 : வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பிப்ரவரி 4, 2026 அன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பிப்ரவரி 3, 2026 அன்று வெளியிட்ட சென்னை வானிலை அய்வு மயம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் மழை பதிவாகியுள்ளது. இதில், கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியில் 2 செ.மீ. மழையும், கோயம்புத்தூரின் உப்பாசி மற்றும் திருநெல்வேலியின் ஊத்து பகுதிகளில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

நாளை மழை பெய்யவிருக்கும் இடங்கள்

மேலும், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் தாழ்வான வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, பிப்ரவரி 3, 2026 இன்று நீலகிரி மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறினார். மேலும் தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதையும் படிக்க : அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை.. தமிழக அரசு எச்சரிக்கை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பிற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் மிதமான பனிமூட்டம் காணப்பட வாய்ப்பு உள்ளது.

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 5, 2026 அன்று தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை தொடரும். பிப்ரவரி 6 முதல் 9, 2026 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : “ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை”.. அஸ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!!

சென்னை வானிலை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பிப்ரவரி 3, 2026 அன்று பகுதி மேகமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும். மேலும், பிப்ரவரி 4, 2026 அன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். வெப்பநிலையிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், உள்ளூர் வானிலை நிலவரங்களை கவனத்தில் கொண்டு தங்களது பணிகளை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Follow Us