தமிழகத்தில் வாட்டி வதைக்கும் பனி.. மழையும் இருக்கு.. வானிலை ரிப்போர்ட் இதோ!!
Weather forecast: தொடர்ந்து, நாளை (பிப்ரவரி 1) அன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை, ஜனவரி 31: தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மழைப் பொழிவு ஏதும் இல்லாத நிலையில், நேற்றும் வறண்ட வானிலையே நிலவியது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் குறைந்தபட்ட வெப்பநிலையில் 2 டிகிரி செல்சியஸ் குறைந்துள்ளது. எனினும், இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக தை மாதத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தது. டிசம்பர் மாதம் எதிர்பார்த்த மழை பெய்யாத நிலையில், இம்மாதம் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த சூழ்நிலையில், தமிழத்தில் நாளை முதல் மீண்டும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுகுறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க: பாஜக – அதிமுக வலுவான கூட்டணி.. திமுகவுக்கு சவாலாக உருவெடுக்கும் என்டிஏ
பனிமூட்டம் வாட்டி வதைக்கும்:
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என கூறியுள்ளது.
நாளை மழைக்கு வாய்ப்பு:
தொடர்ந்து, நாளை (பிப்ரவரி 1) அன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது.
வரும் நாட்களில் வானிலை நிலவரம்:
02-02-2026 அன்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 03-02-2026 அன்று தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 4 மற்றும் 5-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கணித்துள்ளது.
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்றைய தினம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என முன்னறிவித்துள்ளது.
மேலும் படிக்க: இஸ்லாமியர்களுக்கு வெளியிட்ட 5 முக்கிய அறிவிப்புகள் – தஞ்சையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியீடு
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 வேகத்திலும் இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்கண்ட பகுதிகளை மீனவர்கள் தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.