டெல்லியில் காற்று மாசால் மூச்சு விடவே சிரமப்படும் மக்கள்.. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்!
Delhi Air Pollution Getting Worse | டெல்லியில் காற்று மாசு மிக தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 14, 2025) காற்றின் தரம் 459 என்ற குறியீட்டில் மிக மோசமானதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சவால்களை எதிர்க்கொண்டுள்ளனர்.
புது டெல்லி, டிசம்பர் 15 : இந்தியாவின் தலைநகார் டெல்லி (Delhi) ஏற்கனவே மிக கடுமையான காற்று மாசை (Air Pollution) எதிர்க்கொண்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் உள்ள விவசாயிகள் வைக்கோல் எரிப்பது, பட்டாசு வெடிப்பது, வாகன புகை ஆகியவை டெல்லியில் காற்று மாசை மேலும் அதிகரிக்கும் முக்கிய காரணிகளாக மாறி வருகின்றன. இதன் காரணமாக டெல்லியில் காற்று மாசு மிக தீவிரமடைந்து மக்கள் மூச்சு விடுவதற்கே சிரமப்படும் அளவுக்கு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
டெல்லியுல் நேற்று 459 ஆக பதிவு செய்யப்பட்ட காற்றின் தரம்
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அளவுகோலின் படி காற்றின் தரம் பூஜியம் முதல் 50 வரை இருந்தால் நன்று. 51 முதல் 100 வரை இருந்தால் திருப்தி. 101 முதல் 200 வரை இருந்தால் மிதம். 201 முதல் 300 வரை இருந்தால் மோசம். 301 முதல் 400 வரை இருந்தால் மிக மோசம். 401 முதல் 500 வரை இருந்தால் மிக மிக மோசம் என்று வகைப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 14, 2025) டெல்லியின் காற்று மாசு 459 ஆக பதிவு செய்யப்பட்ட நிலையில், காற்றின் தரம் மிக மிக மோசமாக உள்ளதை எச்சரித்துள்ளது.




இதையும் படிங்க : சபரிமலை: பக்தர்கள் மீது டிராக்டர் மோதி விபத்து.. 2 தமிழர்கள் உட்பட 9 பேர் காயம்
காற்று மாசு – மூச்சு விடவே சிரமப்படும் பொதுமக்கள்
#WATCH | Delhi | Visuals from the Akshardham area as a thick layer of toxic smog blankets the city.
AQI (Air Quality Index) around the area is 419, categorised as ‘Severe, as claimed by CPCB (Central Pollution Control Board). pic.twitter.com/5wA1MtSqil
— ANI (@ANI) December 13, 2025
குறிப்பாக டெல்லியின் பல்வேறு பகுதிகள் இரவு நேரத்தில் அடர்த்தியான புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் மூச்சு விடவே மிக கடுமையான சவால்களை எதிர்க்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க : 2.5 லட்சம் மதிப்பிலான கிளிக்காக உயிரை விட்ட தொழிலதிபர்.. பெங்களூரில் சோக சம்பவம்!
இவ்வாறு டெல்லியில் காற்று மாசு மிக மோசமான நிலையை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கும் நிலையில், 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் மற்றும் நேரடியாக கலந்து வகுப்புகளை நடத்த கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.