Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மதுபோதையில் யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை.. பெண் பரிதாப பலி.. உபியில் அதிர்ச்சி சம்பவம்!

Drunken Doctor Done Surgery By Watching YouTube | உத்தர பிரதேசத்தில் உள்ள அனுமதி பெறாத சிகிச்சை மையத்தில் பெண் ஒருவருக்கு அங்கிருந்த மருத்துவர் மதுபோதையில் யூடியூப் பார்த்து சிகிச்சை செய்துள்ளார். இந்த நிலையில் அடுத்த நாளே அந்த பெண் பலியாகியுள்ளார்.

மதுபோதையில் யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை.. பெண் பரிதாப பலி.. உபியில் அதிர்ச்சி சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Dec 2025 22:38 PM IST

லக்னோ, டிசம்பர் 12 : உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம், பாராபங்கி நகரில் வசித்து வந்தவர் முனிஷ்ரா ராவத். இவர் திருமணமாகி தனது கணவர் பதே பகதூருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், ராவத் கடும் வயிற்று வலியால் துடித்துள்ளார். இந்த நிலையில் அவரது கணவர் ராவத்தை அழைத்துக்கொண்டு வீட்டின் அருகில் உள்ள ஸ்ரீ தாமோதர் அவுஷதாலயாவுக்கு சென்றுள்ளார். அந்த சிகிச்சை மையம் உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வருகிறது. அவசர சிகிச்சைக்காக பகதூர் தனது மனைவியை அங்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறிய மருத்துவர்கள்

அப்போது அங்கு ஞான பிரகாஷ் மிஷ்ரா மற்றும் விவேக் மிஷ்ரா ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது ராவத்தின் வயிற்று வலிக்கு சிறுநீரக கட்டி தான் காரணம், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர். அதற்காக ரூ.25,000 கட்டணம் செலுத்த வேண்டும் என கூறிய அவர்கள் பிறகு ரூ.20,000-க்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : பள்ளத்தில் கவிழ்ந்த லாரி.. 22 தொழிலாளர்கள் பலி.. அருணாச்சலப்பிரதேசத்தில் ஷாக் சம்பவம்!

யூடியூப் பர்த்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்

அடுத்த நாள் யூடியூப் பார்த்து பிரகாஷ் அறுவை சிகிச்சை செய்ய தொடங்கியுள்ளார். அப்போது அவர் மது போதையிலும் இருந்துள்ளார். இந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்கிறேன் என கூறி அவர் ராவத்தின் வயிற்றில் இருந்த பல நரம்புகளை துண்டித்துள்ளார். இதனால் கடும் உடல்நல சிக்கலுக்கு ஆளான ராவத் அடுத்த நாள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான பகதூர் போலீசில் புகார் அளித்துள்ளார். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ராவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பு வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : காதல் விவகாரம்.. கல்லூரி மாணவி கொடூரமாக அடித்துக்கொலை.. வெளியான திடுக் பின்னணி!!

இந்த சம்பவம் குறித்து கூறியுள்ள காவல் அதிகாரி அமித் சிங், சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் அந்த சிகிச்சை மையத்தை நாங்கள் ஆய்வு செய்தோம். அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அவர்களை கைது செய்வோம் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.