காதல் விவகாரம்.. கல்லூரி மாணவி கொடூரமாக அடித்துக்கொலை.. வெளியான திடுக் பின்னணி!!
விசாரணையை தொடங்கிய போலீசார் மாணவியின் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், சம்பவத்தன்று ஆலனுடன், பிரியா இருசக்கர வாகனத்தில் செல்வதும், பின்னர் அவர்கள் வேறு இரு சக்கர வாகனத்தில் வந்ததும் பதிவாகி இருந்தது. இதுகுறித்து ஆலனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கேரளாவில் சாலையோரம் அழுகிய நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் கொலையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்மாணவி கொலை செய்யப்பட்ட 2 நாட்கள் கழித்தே, மைதானம் ஒன்றில் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டார். தொடர்ந்து, போலீசார் மோப்பநாய், சிசிடிவி கேமரா உதவியுடன் விசாரணையை தொடங்கினர். அப்போது, சிசிடிவி கேமராவில் மாணவி ஒரு இளைஞருடன் இருசக்கர வாகனத்தில் சம்பவ இடத்தின் அருகே இருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில், அந்த மாணவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்ததில், உயிரிழந்த பெண்ணுடன் கல்லூரியில் படிப்பவர் என்பது தெரியவந்தது. இதில், தான் பல்வேறு திடுக் தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க : கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரின் கார் குளத்தில் விழுந்து விபத்து.. பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு!
கடைக்குப் போவதாக சென்ற பிரியா வீடு திரும்பவில்லை:
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் முண்டங்கா பகுதியை சேர்ந்த சைஜு – சினி தம்பதிகளின் மகள் சித்திர பிரியா (19). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருடன் படித்து வந்த அதே பகுதியை சேர்ந்த ஆலன் (21) என்ற மாணவரும் காதலில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த டிசம்பர் 5ம் தேதி சித்திர பிரியா கல்லூரி விடுமுறையையொட்டி, சொந்த ஊருக்கு வந்துள்ளார். தொடர்ந்து, பெற்றோருடன் வீட்டில் இருந்து வந்த அவர், டிசம்பர் 6ம் தேதி மாலையில் கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டுச் சென்றுள்ளார். ஆனால், வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து, குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் பிரியா கிடைக்கவில்லை. இதனால், அவர்கள் காலடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.




விசாரணையை தொடங்கிய போலீசார்:
இதையடுத்து, விசாரணையை தொடங்கிய போலீசார் மாணவியின் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், சம்பவத்தன்று ஆலனுடன், பிரியா இருசக்கர வாகனத்தில் செல்வதும், பின்னர் அவர்கள் வேறு இரு சக்கர வாகனத்தில் வந்ததும் பதிவாகி இருந்தது. இதுகுறித்து ஆலனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் பிரியாவை வீட்டில் அழைத்து கொண்டுவந்துவிட்டு தான் திரும்பி சென்றதாக தெரிவித்தார்.
அழுகிய நிலையில் பிரியாவின் சடலம்:
இதனிடையே, காலடி அருகே மனப்பாட்டுச்சிரா எனும் பகுதியில் உள்ள மைதானத்தில், சித்திர பிரியாவின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது தலையில் பலத்த ரத்த காயங்கள் இருந்தன. இதனால், போலீசாருக்கு சந்தேகம் வலுக்கவே, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஏனெனில், சம்பவத்தன்று கடைசியாக பிரியா ஆலனுடனம் மட்டும் தான் போனில் பேசியுள்ளார். இதனால், ஆலனை மீண்டும் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் தங்களது பானியில் விசாரித்துள்ளனர்.
கொலையை ஒப்புக்கொண்ட காதலன்:
அப்போது, ஆலன் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி, அவர் அளித்த வாக்குமூலத்தில், தானும், சித்திர பிரியாவும் காதலில் இருந்த நிலையில், கல்லூரியில் உள்ள வேறு ஒரு இளைஞருடன் பிரியா பழகி வந்துள்ளார். அந்த இளைஞருடன் பிரியா இருக்கும் புகைப்படத்தை அவரது செல்போனில் ஆலன் பார்த்துள்ளார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இதையும் படிங்க : போலி மருந்து விவகாரம்…தமிழகத்தில் 34 மருந்தகளை ஆய்வு செய்ய உத்தரவு!
இந்நிலையில், சம்பவத்தன்று பிரியாவை இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து அழைத்துச் சென்று மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தான் மதுபோதையில் இருந்ததாக கூறிய ஆலன், வாக்குவாதம் முற்றியதால், பிரியாவை கல்லால் தலையில் அடித்து கொன்றதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவியை காதலனே கல்லால் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.