பெண்ணை கட்டி போட்டு நகை மற்றும் பணம் கொள்ளை.. பெங்களூரில் பகீர் சம்பவம்!
Woman Tied Up akhs Worth Gold and Cash Robbed | கர்நாடகா மாநிலம், பெங்களூரில் ஒரு பெண் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம கும்பல் அவரது வீட்டிற்குள் நுழைது அந்த பெண்ணின் கை, கால்களை கட்டி போட்டு லட்சகணக்கில் பணம் மற்றும் நகைகளை திருடி சென்றுள்ளனர்.
பெங்களூரு, டிடம்பர் 13 : கர்நாடகா (Karnataka) மாநிலம், சிக்பள்ளாப்பூர் மாவட்டம், சிட்லகட்டா டவுன் இலகிநகர் பகுதியை சேர்ந்தவர் முபாரக். இவரது வீட்டில் இருந்த அனைவரும் ஆன்மீக சுற்றுலா சென்றிருந்த நிலையில், அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த வீட்டில் அந்த பெண் மட்டும் தனியாக இருக்கிறார் என்பதை மர்ம நபர்கள் சிலர் நோட்டமிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தன்று முபாரக்கின் வீட்டிற்குள் நுழைந்த அவர்கள் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் அவரது கை, கால்களை கட்டி போட்டுள்ளனர். அதுமட்டுமன்றி, அந்த பெண் கத்தி கூச்சலிடாமல் இருக்க அவர்கள் அந்த பெண்ணின் வாயில் துணியை வைத்தும் அடைத்துள்ளனர்.
வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு சென்ற கும்பல்
இந்த நிலையில் அவர்கள் முபாரக் அணிந்திருந்த நகைகள், வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். கொள்ளையர்கள் தப்பிச் சென்ற நிலையில், முபாரக் ஊர்ந்தபடி சென்று தனது வீட்டின் கதவை உள் பக்கமாக இருந்து தட்டியுள்ளார். நீண்ட நேரம் அவ்வாறு கதவு தட்டும் சத்தம் கேட்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது முபாரக் கை, கால்கள் கட்டப்பட்டு கிடப்பதை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க : பள்ளத்தில் கவிழ்ந்த லாரி.. 22 தொழிலாளர்கள் பலி.. அருணாச்சலப்பிரதேசத்தில் ஷாக் சம்பவம்!
வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வரும் போலீசார்
இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்றுள்ளனர். அந்த பகுதியை ஆய்வு செய்த போலீசார், வீட்டில் பெண் தனியாக இருப்பதை உணர்ந்துக்கொண்டு திருடர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக முபாரக் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்கிருந்து தப்பிச் சென்ற குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க : காதல் விவகாரம்.. கல்லூரி மாணவி கொடூரமாக அடித்துக்கொலை.. வெளியான திடுக் பின்னணி
பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்துக்கொண்டு வீட்டில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.