Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பூட்டிய வீட்டிற்குள் சடலமாக தூக்கில் தொங்கிய தாய் மற்றும் மகன்கள்.. பகீர் சம்பவம்!

Mother and Her Two Sons Killed Themselves | நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்காக டெல்லியில் உள்ள ஒரு வீட்டிற்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் சென்றுள்ளனர். அந்த வீட்டில் இருந்த தாய் மற்றும் அவரது இரண்டு மகன்கள் தொங்கியதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பூட்டிய வீட்டிற்குள் சடலமாக தூக்கில் தொங்கிய தாய் மற்றும் மகன்கள்.. பகீர் சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 13 Dec 2025 08:45 AM IST

புதுடெல்லி, டிசம்பர் 13 : புதுடெல்லியில் (New Delhi) சொத்துக்களை பறிமுதல் செய்வதற்காக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதற்காக, கிழக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றுள்ளார். அவர்கள் அங்கு சரியாக மதியம் 2.40 மணிக்கு அங்கு சென்றுள்ளனர். வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் கதவை தட்டியுள்ளனர். அப்போது தான் அவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

வீட்டிற்குள் சடலமாக தூக்கில் தொங்கிய தாய் மற்றும் மகன்கள்

அதிகாரிகள் மிக நீண்ட நேரமாக கதவை தட்டியும், கதவு திறக்கப்படாமலே இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், உடனடியாக வீட்டின் கதவின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அவ்வாறு உள்ளே சென்ற அவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அதாவது அந்த வீட்டிற்குள் அனுராதா கபூர் என்ற 52 வயது பெண், அவரது மகன்களான அஷீஷ் கபூர் என்ற 32 வயது நபர் மற்றும் சைதன்யா கபூர் என்ற 27 வயது நபர் ஆகியோர் மின்விசிரியில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளனர்.

இதையும் படிங்க : இந்த மாநிலத்தில் 7,400 பேருக்கு ஹெச்ஐவி தொற்றா? 400 குழந்தைகளா?

கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட குடும்பத்தினர்

தாய் மற்றும் அவரது இரண்டு மகள்கள் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில், போலீசார் அந்த வீடு முழுவதும் சோதனை செய்துள்ளனர். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதன் மூலம் அந்த குடும்பத்தினர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. மன உளைச்சல் காரணமாக அந்த குடும்பத்தினர் தற்கொலை செய்துக்கொண்டதை போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க : பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. 9 பேர் உயிரிழப்பு

வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார்

அந்த மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.