Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. 9 பேர் உயிரிழப்பு

Bus Accident: இன்று அதிகாலை நேரத்தில் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த அந்தப்பேருந்து,கூர்மையான வளைவில் திரும்ப முயற்சித்துள்ளது. அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையை விட்டு விலகிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அது செங்குத்தான சரிவில் விழுந்து விபத்து நிகழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. 9 பேர் உயிரிழப்பு
பேருந்து கவிழ்ந்து விபத்து
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 12 Dec 2025 10:25 AM IST

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே தனியார் பேருந்து (Bus Accident) பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மிக சுற்றுலாவுக்காக 35 பேருடன் சென்ற அந்தப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து, காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சித்தூர் அரசு மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு குழுவினரும், போலீசாரும் சம்பவ இடத்தில் தீவிரமாக பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, விபத்து குறித்து, தகவலறிந்த அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரின் கார் குளத்தில் விழுந்து விபத்து.. பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு!

ஆன்மிக சுற்றுலா சென்ற பேருந்து விபத்து:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 பேர் தனியார் பேருந்து ஒன்றில் பத்ராசலம் பகுதியில் உள்ள ராமர் கோயில் உள்ளிட்ட புண்ணிய தலங்களுக்கு சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளனர். அங்கு தரிசனம் முடிந்த பிறகு அன்னவரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, மாரேடுமல்லி மலைப்பாதையை கடந்து செல்லும்போது, கடும் மூடுபனி காரணமாகவும், சாலை வளைவுகள் காரணமாகவும் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடம்:

இந்த விபத்து குறித்து தகவலறிந்த சிந்தூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்குள்ளான பேருந்தில் 35 பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்கள் இருந்ததும் அவர்கள் அனைவரும் சித்தூரை சேர்ந்தவர்கள் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஏற்கெனவே, ஆந்திர மாநிலம் கர்னூலில் கடந்த மாதம் பேருந்தில் ஏற்பட்ட மோசமான தீ விபத்தில் சிக்கி சுமார் 25 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். அந்த சம்பவத்தை தொடர்ந்து, மேலும் ஒரு பயங்கராமன பேருந்து விபத்து நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : திருமணத்திற்கு முன்பு விபத்தில் சிக்கிய மணமகள்.. மணமகன் செய்த நெகிழ்ச்சி செயல்!

சந்திரபாபு நாயுடு இரங்கல்:

இதனிடையே, அல்லூரியில் நடந்த இந்த கோர விபத்துக்கு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிடவும், மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு:

இந்த விபத்து சம்பவம் குறித்த பிரதமர் மோடி, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதோடு, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் நிவாரணம் அறிவித்துள்ளார்.