600 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்.. சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாப பலி!
Maharashtra Car Accident | மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் பகுதியில் மலைப்பகுதியில் சென்றுக்கொண்டு இருந்த கார், சாலை ஓரத்தில் இருந்த 600 அடி பள்ளத்தில் விழுந்து கடும் விபத்துக்கு உள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
மும்பை, டிசம்பர் 08 : மகாராஷ்டிராவில் (Maharashtra) 600 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கார் விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சாலையில் சென்ற கார் 600 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
600 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான கார்
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டம், நிப்ஹட் பகுதியை சேர்ந்த 6 பேர் ஒரு காரில் நேற்று (டிசம்பர் 07, 2025) மாலை கல்வான் பகுதிக்கு சென்றுக்கொண்டு இருந்துள்ளனர். அந்த கார் கல்வான் அருகே மலைப்பாங்கான ஹர்க் ஹண்ட் பகுதியில் சென்றுக்கொண்டு இருந்தபோது ஓட்டிநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அப்போது கார் சாலையோரத்தில் உள்ள 600 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கடும் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த கொடூர விபத்தில் அந்த காரில் பயணம் செய்த ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
இதையும் படிங்க : கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரின் கார் குளத்தில் விழுந்து விபத்து.. பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு!
நடுங்க வைக்கும் கார் விபத்து – 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி
🚨 Tragedy in Nashik: 6 Dead After Car Plunges 600 Feet into Gorge! 🚗🇮🇳
– All from Pimpalgaon Baswant in a Toyota Innova; rescue teams at work, CM Fadnavis gives Rs 5L aid per family.#NashikAccident #MaharashtraTragedy #RoadSafety pic.twitter.com/TbVH1UCTUr
— Voice Of Bharat 🇮🇳🌍 (@Kunal_Mechrules) December 7, 2025
கார் 600 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து அந்த வழியாக பயணம் செய்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பள்ளத்தில் உயிரிழந்து கிடந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிறகு பள்ளத்தில் இருக்கும் காரை மீட்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : 95 சதவீத விமான சேவைகள் மீட்பு.. கடும் சவால்களுக்கு பிறகு இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்து நடைபெற்றது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



