அமெரிக்காவில் தீ விபத்தில் உயிரிழந்த இந்திய மாணவி!
Indian student die: அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலத்த தீக்காயமடைந்த இந்திய மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இறுதி சடங்கு உள்ளிட்டவற்றுக்காக அவரது குடும்பத்தினர் ரத்த கோப்பு நிதியை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த 24 வயதான சகஜா ரெட்டி உடுமலா தனது மேல் படிப்புக்காக அமெரிக்கா, நியூயார்க்கில் தங்கி படித்து வந்தார். இவர், நியூயார்க்கில் அல்பானியில் உள்ள வீட்டில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில், அண்மையில் அவர் தங்கியிருந்த வீட்டில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில், சிக்கிக் கொண்ட சகஜா ரெட்டி உடுமலா வெளியே வர முடியாமல் சத்தமிட்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அல்பானி காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பலத்த தீக்காயம் அடைந்த மாணவி
இதில், வெகு நேரத்துக்கு பிறகு வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்த தீயணைப்பு படையினர் பலத்த தீக்காயம் ஏற்பட்டு மயங்கி கிடந்த மாணவி சகஜா ரெட்டி உடுமலாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சகஜா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தீக்காயம் 90 சதவீதம் அளவுக்கு இருந்ததால் தீவிர சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
மேலும் படிக்க: இண்டிகோ சேவை ரத்து.. கவுண்டரில் ஏறி நின்று வெளிநாட்டு பெண் பயணி வாக்குவாதம்.. வீடியோ!!




90 சதவீத தீக்காயத்தால் உயிரிழந்த மாணவி
அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையிலும், சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகம் உயிரிழந்த மாணவி சகஜா ரெட்டி உடுமலாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அமெரிக்காவில் தீ விபத்தில் உயிரிழந்த சகஜாவின் இறுதிச் சடங்கு உள்ளிட்டவற்றுக்காக மாணவியின் உறவினர்கள் ரத்த கோப்பு நிதியை திரட்டும் பணியை தொடங்கியுள்ளனர். இதில், இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடி வரை நன்கொடை திரட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அமெரிக்காவில் பெரும் கனவுடன் மேல் படிப்புக்காக சென்ற எங்க மகள் பரிதாபமாக தீ விபத்தில் உயிரிழந்து விட்டதாக மாணவியின் பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
மாணவி உயிரிழப்புக்கு இந்திய தூதரகம் இரங்கல்
மாணவி உயிரிழந்தது தொடர்பாக இந்திய துணை தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மாணவி உயிரிழந்த இந்த கடினமான நேரத்தில் மாணவியின் குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களது குடும்பத்துக்கு அனைத்து உதவிகளையும் இந்திய துணை தூதரகம் செய்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இந்தியாவில் ஒரே ஆண்டில் சாலை விபத்தில் 1.77 லட்சம் பேர் மரணம்!