குடியேற்றத்திற்கு விண்ணப்பிக்க இந்த 19 நாடுகளுக்கு தடை.. அதிரடி தடை உத்தரவு பிறப்பித்த அமெரிக்கா!
US Bans 19 Nations from Citizenship | விசா உள்ளிட்டவை குறித்து அமெரிக்க அரசு பல்வேறு தடைகளை விதித்து வரும் நிலையில், தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது, 19 நாடுகளுக்கு குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பிக்க அமெரிக்க அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
வாஷிங்டன், டிசம்பர் 06 : அமெரிக்காவில் (America) இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் (Donald Trump) அங்கு ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பல்வேறு விஷயங்களின் விதிகளை மாற்றி வருகிறார். குறிப்பாக சட்டவிரோத குடியேற்றம், விசா ஆகியவற்றுக்கான பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் குடியுரிமை பெற 19 நாடுகளுக்கு தடை விதித்து டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அரசின் இந்த புதிய உத்தரவு குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாழ்வாதாரம் தேடி அமெரிக்கா செல்லும் உலக நாட்டு மக்கள்
இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் இருந்து ஏராளமான பொதுக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, சிறந்த வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்களுக்காக அமெரிக்காவுக்கு செல்கின்றனர். அவ்வாறு அங்கு செல்லும் பொதுமக்கள் அங்கேயே குடியுரிமை பெற்று அந்த நாட்டின் குடிமகன்களாக மாறி விடுகின்றனர். இவ்வாறு லட்சக்கணக்கான உலக நாட்டு மக்கள் அமெரிக்காவில் வசிக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்ட விரோத குடியேரிகளை வெளியேற்றும் பணியை அமெரிக்க அரசு மேற்கொண்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் வலுகட்டாயமாக அமெரிக்காவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் , அமெரிக்க அரசு மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : உணவை ஆய்வு செய்ய லேப்.. நடமாடும் கழிவறை.. ரஷ்ய அதிபரின் பாதுகாப்பு விஷயங்க




19 நாடுகளுக்கு குடியுரிமைக்கு விண்ணப்பிக்க அமெரிக்கா மறுப்பு
அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பிக்க 19 நாடுகளுக்கு மறுப்பு தெரிவித்து அமெரிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது, ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, ஈகுவடாரில் கினி, எரித்ரியா, ஹைதி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன், புருண்டி, கியூபா, லாவோஸ், சிரியா லியோன், டோகா, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா உள்ளிட்ட மொத்தம் 19 நாடுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க : தனது மகனுக்கு சேகர் என பெயர் வைத்த எலான் மஸ்க்.. அவரே சொன்ன காரணம்!
ஏற்கனவே விசா மற்றும் குடியேற்றம் தொடர்பாக அமெரிக்க அரசு தொடர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது 19 உலக நாடுகளுக்கு குடியுரிமை பெறுவதற்கு அமெரிக்க அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.