Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தனது மகனுக்கு சேகர் என பெயர் வைத்த எலான் மஸ்க்.. அவரே சொன்ன காரணம்!

Tesla Founder Elon Musk Named His Son As Sekhar | உலக பணக்காரர் எலான் மக்ஸ் தனது மகனுக்கு சேகர் என பெயர் சூட்டியுள்ளார். அந்த பெயரை சூட்டியதற்கான காரணம் குறித்து அவர் சமீபத்தில் பங்கேற்ற நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

தனது மகனுக்கு சேகர் என பெயர் வைத்த எலான் மஸ்க்.. அவரே சொன்ன காரணம்!
எலான் மஸ்க் குடும்பம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 02 Dec 2025 07:55 AM IST

வாஷிங்டன், டிசம்பர் 02 : உலக பணக்காரரும், டெஸ்லா (Tesla), ஸ்பேஸ் எக்ஸ் (Space X) உள்ளிட்ட புகழ்பெற்ற நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க் (Elon Musk), ஆச்சர்யமூட்டும் செயல்களை செய்வதற்கு பெயர் போனவர். இந்த நிலையில், தனது மகனுக்கு சேகர் என பெயர் வைத்து இந்தியர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், தனது குடும்பத்தை பற்றி பேசும்போது இந்த தகவலை தெரிவித்துள்ளார். இந்த நிலையில், எலான் மக்ஸ் தனது மகனுக்கு சேகர் என பெயர் வைக்க என்ன காரணம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மகனுக்கு சேகர் என பெயர் சூட்டிய எலான் மஸ்க்

எலான் மஸ்க் சமீபத்தில் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் தனது மனைவி சிலிஸ் மற்றும் குழந்தைகள் குறித்து பேசியிருந்தார். குறிப்பாக தனது மகனுக்கு நோபல் பரிசு பெற்ற இந்திய – அமெரிக்க விஞ்ஞானி சுப்ரமணியன் சந்திரசேகரின் நினைவாக சேகர் என பெயர் வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : காதலனுடன் கடற்கரையில் குளித்த இளம் பெண்.. சுறா கடித்து பரிதாப பலி!

மகனின் பெயர் காரணம் குறித்து பேசிய மஸ்க்

இது குறித்து நேர்காணல் நிகழ்ச்சியில் பேசியிருந்த மஸ்க், எனது மனைவி ஷிவான் சிலிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவருக்கும் எனக்கும் பிறந்த மகன்களில் ஒருவருக்கு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சந்திரசேகரின் நினைவாக சேகர் என பெயர் சூட்டியுள்ளோம். எனது மனைவி ஷிவான், கைக்குழந்தையாக இருக்கும்போது அவரது பெற்றோர்கள் அவரை தத்து கொடுத்துவிட்டனர்.

இதையும் படிங்க : இலங்கையில் ருத்ரதாண்டவம் ஆடிய ‘தித்வா புயல்’.. பலியானோர் எண்ணிக்கை 123 ஆக உயர்வு.. 130 பேர் மாயம்

எனது மனைவி தத்து கொடுக்கப்பட்டவர் – எலான் மஸ்க்

அவரது தந்தை பல்கலைக்கழகத்தில் படிக்க வந்த வெளிநாட்டு மாணவர் என நினைக்கிறேன். எனக்கு அதுப்பற்றி முழு விவரங்கள் தெரியாது. ஆனால், ஷிவான் குழந்தையாக இருக்கும்போதே தத்து கொடுக்கப்பட்டார். அவர் கனடாவில் வளர்ந்தார் என்று தனது மனைவி குறித்தும் மகன் குறித்தும் சில முக்கிய தகவல்களை மக்ஸ் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.