AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காதலனுடன் கடற்கரையில் குளித்த இளம் பெண்.. சுறா கடித்து பரிதாப பலி!

Young Woman Died In Shark Attack | ஆஸ்திரேலியாவில் உள்ள கடற்கரை ஒன்றில் இளம் பெண் ஒருவர் தனது காதலனுடன் குளிக்கச் சென்றுள்ளார். அவர்கள் குளித்துக்கொண்டு இருந்த நிலையில், சுறா தாக்கி அந்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

காதலனுடன் கடற்கரையில் குளித்த இளம் பெண்.. சுறா கடித்து பரிதாப பலி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Nov 2025 16:38 PM IST

கான்பெரா, நவம்பர் 29 : ஆஸ்திரேலியாவின் (Australia) நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கைலீஸ் நகரம், அழகிய கடற்கரைகள் ஆகியவை அமைந்துள்ளன. கடற்கரையின் அழகை காணவும், நகரத்தை சுற்றி பார்க்கவும் உள்ளூர் மக்கள் மட்டுமன்றி, பல்வேறு உலக நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வருவது வழக்கம். அந்த வகையில் 20 வயது இளம் பெண் ஒருவரும் தனது ஆண் நண்பருடன் அந்த பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது கடலில் குளித்துக்கொண்டு இருந்த அந்த பெண்ணுக்கு சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடலில் குளித்துக்கொண்டு இருந்த இளம் பெண் சுறா கடித்து பலி

கடற்கரைக்கு சென்ற காதலர்கள் இருவரும் இணைந்து கடலில் குளித்துள்ளனர். அப்போது சுறா ஒன்று அவர்களை தாக்கியுள்ளது. இதனால் அருகில் இருந்தவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காதல் ஜோடி அருகே சென்று பார்த்தபோது அந்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே பலியானதை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். பின்னர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அந்த இளைஞரை மீட்ட பொதுமக்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க : இலங்கையை புரட்டிப்போட்ட தித்வா புயல் – இதுவரை 20 பேர் பலி, 14 பேர் மாயம் – தமிழகத்திலும் எதிரொலிக்குமா?

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காதலன்

பலத்த காயமடைந்த இளம் பெண்ணின் காதலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சுறா கடித்த சம்பவ இடத்திலேயே பலியான இளம் பெண்ணின் உடலை மீட்டு அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிறகு சுறா கடித்து இளம் பெண் பலியான நிலையில், அந்த கடற்கரையை மூடிய அதிகாரிகள் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை உடனடியாக வெளியேற்றினர்.

இதையும் படிங்க : இறந்த தாய் போல வேடமிட்டு பென்ஷன் பணம் வாங்கி வந்த மகன்.. இத்தாலியில் நூதன மோசடி!

சுறா, திமிங்கலம் உள்ளிட்ட பெரிய வகை  மீன்கள் நடு கடல் பகுதியில் இருக்கும். இதன் காரணமாக பொதுமக்கள் கடற்கரையில் குளிப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், கடற்கரையில் குளித்த இளம் பெண் சுறா தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us