இறந்த தாய் போல வேடமிட்டு பென்ஷன் பணம் வாங்கி வந்த மகன்.. இத்தாலியில் நூதன மோசடி!
Man Pretends Like Deceased Mother To Get Pension | இத்தாலியை சேர்ந்த ஒரு நபர் தனது தாய் 2022 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், அவரது பென்ஷன் பணத்தை தொடர்ந்து வாங்க வேண்டும் என்பதற்காக தாயை போல வேடமிட்டு மோசடி செய்து வந்துள்ளார்.
ரோம், நவம்பர் 27 : இத்தாலியில் (Italy) உள்ள போர்கோ விர்ஜிலியோ நகரை சேர்ந்தவர் 56 வயது நபர். இவர் இறந்துப்போன தனது தாய் உயிருடன் இருப்பதை போல வேடமிட்டு பென்ஷன் பணம் (Pension Money) வாங்கி மோசடி செய்து வந்தது தெரிய வந்துள்ளது. அவரது தாய் 2022 ஆம் ஆண்டே உயிரிழந்துவிட்ட நிலையில், அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக தனது தாய் போல வேடமிட்டு பென்ஷன் தொகையை வாங்கி வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இறந்த தாய் போல வேடமிட்டு பென்ஷன் பணம் வாங்கி வந்த நபர்
கிராசியெல்லா என்ற பெண் 2022 ஆம் ஆண்டு தனது 82 வது வயதில் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், தாயின் பென்ஷன் பணத்தை தொடர்ந்து பெற நினைத்த மகன் ஒரு மாஸ்டர் பிளான் போட்டுள்ளார். அதாவது தாய் இறந்ததை வெளியே கூறாமல் அவர் உயிருடன் இருப்பதை போலவே வேடமிட்டு பணத்தை வாங்கிக்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். அதற்காக அவர் தனது தாயின் மரணம் குறித்து அரசுக்கு தெரிவிக்காமல், உடலை பதப்படுத்தி வீட்டில் மறைத்து வைத்துள்ளார். அதன் பிறகு தனது தாயை போல வேடமிட்டு பணத்தை பெற்று வந்துள்ளார்.
இதையும் படிங்க : நைஜீரியாவில் நடைபெற்று வரும் தொடர் தாக்குதல்கள் மற்றும் கடத்தல்கள்.. காரணம் என்ன?
அடையாள அட்டை புதுப்பிக்க சென்றபோது உருவான சிக்கல்
தாயின் பென்ஷன் பணத்தை வாங்கி வந்த அவர், தாயின் அடையாள அட்டையை புதுப்பிக்க தனது தாயை போல வேடமணிந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது அந்த நபரின் கையில் இருக்கும் தோல் ஒரு 85 வயது பெண்ணின் தோலை போன்றது இல்லை என்பதை அந்த ஊழியர் கவனித்துள்ளார். இதனால் அவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஜி20 மாநாடு: உலக நலனுக்காக பிரதமர் மோடி முன்வைத்த 3 முக்கிய முயற்சிகள்
போலீசார் விசாரணையில் தெரிய வந்த உண்மை
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த நபர் தனது தாயை போல வேடமிட்டு சில ஆண்டுகளாக பென்ஷன் பணம் பெற்று வந்ததை கண்டுபிடித்துள்ளனர். அவர் ரூ.80 லட்சம் பணத்தை தனது தாய் போல வேடமிட்டு மோசடி செய்ததை போலீசார் கண்டு பிடித்துள்ளனனர். இதனை தொடர்ந்து அவர் வீட்டில் பதப்படுத்தி வைத்திருந்த அவரது தாய் கிராசியெல்லாவின் உடலையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.