நைஜீரியாவில் நடைபெற்று வரும் தொடர் தாக்குதல்கள் மற்றும் கடத்தல்கள்.. காரணம் என்ன?
Why Nigeria Faces Mass Kidnappings | கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தப்படுவது, கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக ஒரு கத்தோலிக்க பள்ளியில் சுமார் 300 மாணவர்கள் துப்பாக்கி முணையில் கடத்தப்பட்டுள்ளனர்.
கிழக்கு ஆப்ரிக்காவில் (West Africa) உள்ள நைஜீரியா (Nigeria) நாட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தப்படுவது, கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி, குடியிருப்பு பகுதிகளில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளனர். நைஜீரியாவில் நடந்துக்கொண்டு இருக்கும் இந்த தொடர் கடத்தல் மற்றும் தாக்குதல்களுக்கு காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நைஜீரியாவில் நடைபெற்று வரும் தொடர் தாக்குதல்கள் மற்றும் கடத்தல்கள்
நைஜீரியா தற்போது உலகளாவிய கண்காணிப்பின் கீழ் உள்ளது. வடகிழக்கில் உள்ள ஒரு கத்தோலிக்க பள்ளியில் இருந்து சுமார் 300 மாணவர்கள் துப்பாக்கிய முணையில் கடத்தப்பட்டதை தொடர்ந்து இதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கடத்தல் சம்பத்தை தொடர்ந்து அங்கு கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கிழக்கு ஆப்ரிக்க நாட்டில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிக கடுமையாக எச்சரித்து ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட நேரிடும் என எச்சரித்துள்ள நிலையில், அது நைஜீரியாவுக்கு கூடுதல் சுமையாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க : ஜோகன்னஸ்பர்க்கில் இந்திய வம்சாவளி தொழில்நுட்ப தொழில்முனைவோரை சந்தித்த பிரதமர் மோடி.. இந்திய மக்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற அழைப்பு




கத்தோலிக்க பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட 300 மாணவர்கள்
2014 ஆம் ஆண்டு வடகிழக்கில் போகோ ஹாரம் அமைப்பால் 276 சிக்பாக் சிறுமிகள் கடத்தப்பட்டதை விட இந்த கத்தோலிக்க பள்ளியில் இருந்து 300 மாணவர்கள் கடத்தப்பட்டது மிகப்பெரிய கடத்தல் சம்பவமாக உள்ளது. இந்த கடத்தலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேர்க்கவில்லை. இந்த கடத்தல்கள் ஒரே முறையில் நடைபெறுகின்றன. அதாவது, பண்டிட் எனப்படும் குழு பொது இடங்களுக்கு சென்று துப்பாக்கிச்சூடு நடத்திய பொதுமக்களை பயமுர்த்திவிட்டு பிறகு கடத்தலில் ஈடுபட்டு அருகில் உள்ள வனப்பகுதிகளுக்குள் மாயமாகிவிடுவது தான்.
இதையும் படிங்க : துபாய் ஏர் ஷோ…. இந்திய தயாரிப்பான தேஜஸ் போர் விமானம் விபத்து – வெளியான அதிர்ச்சி தகவல்
நைஜீரியாவில் தொடரும் கடத்தல்கள்
- நவம்பர் 18, 2025 அன்று கெப்பி மாநிலத்தில் உள்ள பெண்கள் இஸ்லாமிய பள்ளியில் இருந்து 25 மாணவிகள் கடத்தப்பட்டனர்.
- அதே நாளில் சம்ஃபரா மாநிலத்தில் இருந்து பெண்கள் குழந்தைகள் என 64 பேர் ஒரு குழுவால் கடத்தப்பட்டனர்.
- நவம்பர் 19, 2025 அன்று கவாரா மாநிலத்தில் கிறிஸ்து அப்போஸ்தலிக் ஆலையத்தில் 2 பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அங்கு வழிபாடு நடத்திக்கொண்டு இருந்த 38 பேர் கடத்தப்பட்டனர்.
இத்தகைய கடத்தல் சம்பவங்கள் பணத்துக்காக நடத்தப்படுவதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பள்ளிகள் இதற்கு மிக சுலபமாக இருப்பதால் கடத்தல் காரர்கள் பள்ளிகளை குறி வைப்பதாகவும், பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை மீட்க பணத்தை சேமிப்பதாகவும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.