Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை.. அச்சுற்றுத்தும் கரும்புகை.. பொதுமக்கள் அச்சம்!

Semeru Volcano Erupted in Indonesia | இந்தோனேசியாவில் பல்வேறு எரிமலைகள் உள்ளன. அந்த எரிமலைகளில் ஒன்றுதான் செமேரு. இந்த எரிமலை வெடித்து சிதறியுள்ள நிலையில், அதில் இருந்து கரும்புகை வெளியேறி வருகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை.. அச்சுற்றுத்தும் கரும்புகை.. பொதுமக்கள் அச்சம்!
கரும்புகையை வெளியேற்றும் எரிமலை
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Nov 2025 08:42 AM IST

ஜகர்தா, நவம்பர் 20 : பல்வேறு உலக நாடுகளில் எரிமலைகள் (Volcano) அமைந்துள்ளன. இந்த எரிமலைகளில் பல செயலற்று மலை குன்றுகளாக உள்ளன. ஆனால், சில எரிமலைகள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளன. அவை அவ்வப்போது எரிமலை குழம்புகளை வெளியிடுவது, வெடித்து சிதறுவதை ஆகியவற்றை செய்கின்றன. அந்த வகையில், இந்தோனேசியாவில் (Indonesia) எரிமலை ஒன்று வெடித்து சிதறியுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த நிலையில்,  இந்த எரிமலை வெடிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை

ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. அங்கு பல்வேறு எரிமலைகள் உள்ளன. இந்த எரிமலைகளில் சில அவ்வப்போது வெடித்து சிதறி எரிமலை குழம்பை வெறியேற்றி வருகின்றன. அந்த வகையில், இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள செமேரு (Semeru) என்ற எரிமலை நேற்று (நவம்பர் 19, 2025) வெடித்து சிதறியுள்ளது. இதன் காரணமாக அந்த எரிமலையில் இருந்து கரும்புகையுடன், லாவா எரிமலை குழம்பு வெளியேறி வருகிறது.

இதையும் படிங்க : Bus Accident In Madina : ஹஜ் பயணிகள் பேருந்து எரிந்து விபத்து.. 42 இந்தியர்கள் பலி என தகவல்!

எரிமலையில் இருந்து வெளியேறி வரும் லாவா எரிமலை குழம்பு

இந்தோனேசியாவின் இந்த செமேரு எரிமலை வெடித்து சிதறியதன் காரணமாக அதில் இருந்து கரும்புகை வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த நிலையில், எரிமலையின் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் கிராம் மக்களை அரசு அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளது. அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : சீனா மற்றும் லடாக்கில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. அச்சத்தில் பொதுமக்கள்!

எரிமலை வெடித்து சிதறியதன் காரணமாக அங்கு சற்று பரபரப்பான சூழல் காணப்படுகிறது. மேலும் இந்த எரிமலை வெடிப்பு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.