Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சீனா மற்றும் லடாக்கில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. அச்சத்தில் பொதுமக்கள்!

Xinjiang and Ladakh Faced Earthquake | சீனாவின் ஜின்ஜியாங் மற்றும் லடாக் பகுதிகளில் இன்று (நவம்பர் 17, 2025) அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜின்ஜியாங்கில் 4.4 ரிக்டர் அளவிலும், லடாக்கில் 3.7 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீனா மற்றும் லடாக்கில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. அச்சத்தில் பொதுமக்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Nov 2025 11:15 AM IST

ஜின்ஜியாங், நவம்பர் 17 : சீனாவின் (China) ஜின்ஜியாங் நகரின் இன்று (நவம்பர் 17, 2025) அதிகாலை 1.26 மணிக்கு மிதமான அளவில் நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் (NCS – National Center for Seismology) தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததாகவும் தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தியாவின் கார்கில் நகரில் இருந்து வடகிழக்கில் சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் உணரப்பட்டது.

சீனாவை தொடர்ந்து லடாக்கில் ஏற்பட்ட நிலநடுக்கம்

சீனாவை தொடர்ந்து லடாக்கிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது அதிகாலை 3.15 மணி அளவில் லடாக்கின் லே பகுதியில் மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில்நடுக்கம் ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதையும் படிங்க : வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரம்.. வீதியையே இருட்டாக்கிய இளைஞர்

லடாக்கில் 3.7 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்

லடாக் யூனியன் பிரதேசத்தின் கார்கில் நகரில் இருந்து வடக்கு வடகிழக்கே 244 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

சீனாவில் 4.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

சீனா மற்றும் லடாக் ஆகிய இரண்டு பகுதிகளிலுமே மிக குறைவான அளவு நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், அங்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த வித தகவலும் வெளி வராமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.