கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து; ஒருவர் பலி..15 பேரின் நிலை என்ன?
இடிபாடுகளுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், அதனைக் கண்டறிய விசாரணை தொடங்கப்படும் என்றும், சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நீதிபதி கூறியுள்ளார். மேலும், விபத்தின் போது குவாரிக்குள் 12க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்ததாக சக தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேசம், நவம்பர் 16: உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில், தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும், 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாறைகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் (NDRF& SDRF) உள்ளிட்ட நிவாரணக் குழுக்கள் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. நிலச்சரிவு ஏன் ஏற்பட்டது என்பது குறித்த காரணம் சரியாக தெரியவில்லை. தொடர்ந்து, அதற்கான விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதையும் படிக்க: ‘டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதல் தான்’.. மத்திய அரசு அறிவிப்பு!
குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து விபத்து:
உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ராவில் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியின் உள்ளேயும், பெரிய பள்ளம் தோண்டப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு தொழிலாளர்கள் வழக்கம் போல் நேற்றிரவு வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததால் உள்ளே பணியில் இருந்த தொழிலாளர்கள் 15 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அதிரடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, பாறைகளுக்கு அடியை சிக்கிய தொழிலாளர் ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க : டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்: சிக்கும் மருத்துவர்கள்.. வெளியான பகீர் தகவல்!!
மீட்புப் பணியில் வீரர்கள்:
#WATCH | Sonbhadra, UP | Visuals from the spot where around 15 people are feared trapped after a stone mine collapsed yesterday in Sonbhadra. NDRF and SDRF teams are at the spot. One body has been recovered. Rescue operations are underway.
(Source: NDRF) pic.twitter.com/jPQ86U9ZaH
— ANI (@ANI) November 16, 2025
இதனிடையே, மீட்புப் பணிகளுக்கு உதவ கூடுதல் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களும் கொண்டு வரப்படுவதாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட நீதிபதி பத்ரிநாத் சிங் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, இந்த கல்குவாரி சட்டவிரோதமாக இயங்கி வந்ததா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
சுரங்கப் பகுதியில் இடிந்து விழுந்த நேரத்தில், ஒன்பது கம்ப்ரசர்கள் அந்த இடத்திலேயே இயங்கி வந்ததாகவும், மேலும் ஒவ்வொரு கம்ப்ரசரிலும் ஒருவர் தொழிலாளர் நிறுத்தப்பட்டிருந்தாகவும் அங்கிருந்த தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.