Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆரம்பத்தில் இருந்தே நியாயமாக நடக்கல… பீகார் தேர்தல் முடிவு குறித்து ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு

Rahul Gandhi : பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்விக்குப் பிறகு, அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முதன்முறையாக மனம்திறந்துள்ளார். பீகார் தேர்தல் ஆரம்பத்தில் இருந்தே நியாமாக நடக்கவில்லை, இந்த முடிவு உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. என்று பதிவிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் இருந்தே நியாயமாக நடக்கல… பீகார் தேர்தல் முடிவு குறித்து ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு
ராகுல் காந்தி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 14 Nov 2025 22:14 PM IST

பீகார் சட்டசபை தேர்தலில் (Bihar Election Result) காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவைத் தொடர்ந்து, கட்சியின் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) முதன்முறையாக மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், பீகார் தேர்தல் ஆரம்பத்தில் இருந்தே நியாமாக நடக்கவில்லை என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தனது பதிவில் பீகார் மக்கள் தந்த ஆதரவுக்காக நன்றி தெரிவித்த ராகுல் காந்தி, தேர்தல் தோல்விக்கு காரணமான அம்சங்களை கட்சி தீவிரமாக ஆய்வு செய்யும் என்றும் உறுதியளித்தார். அவரது குற்றச்சாட்டு அரசியல் அரங்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பீகார் தேர்தல் குறித்து மவுனம் கலைத்த ராகுல் காந்தி

பீகார் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.  காங்கிரஸ் கட்சி தேர்தலில் படு தோல்வி அடைந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், காங்கிரஸ் கூட்டணி மீது நம்பிக்கை வைத்த பீகாரில் உள்ள லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பீகாரில் இந்த முடிவு உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது.

இதையும் படிக்க : பீகார் தேர்தல்: மாநிலத்தையே வியந்து பார்க்க வைத்த சிராக் பஸ்வானின் வெற்றி!!

தொடக்கத்திலிருந்தே நியாயமற்ற தேர்தலில் நாம் வெற்றி பெறத் தவறிவிட்டோம். அரசியலமைப்புச் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்காகவே  இந்தப் போராட்டம். காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியும் இந்த முடிவை தீவிரமாக ஆய்வு செய்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை காங்கிரஸ் கட்சி நிச்சயம் மேற்கொள்ளும் என தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தியின் எக்ஸ் பதிவு

 

இதையும் படிக்க : இளம் பாடகி முதல் சினிமா நடிகர் வரை.. பீகாரில் ஸ்டார் வேட்பாளர்களின் நிலவரம் என்ன?

ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டு தேசிய அரசியல் சூழலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள்,  பாஜக கூட்டணியின் பிரச்சார முறைகள் குறித்து காங்கிரஸ் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், அவர் தனது பதிவில் தேர்தல் குறித்து குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.  இதனையடுத்து ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பாஜக தரப்பில் என்ன மாதிரியான எதிர்வினைகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது உருவாகியுள்ளது.