Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பீகாரில் ஆட்சியை கைப்பற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி.. உரையாற்றும் பிரதமர் மோடி..

பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அபார வெற்றியை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கிறது. மாநிலத்தில் உள்ள 243 இடங்களில் 200 இடங்களில் தேசிய ஜன்நாயக கூட்டணி முன்னிலை வகிப்பதைக் காட்டுகின்றன. பீகாரில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியடையும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கட்சி தொண்டர்களிடையே உரையாற்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

பீகாரில் ஆட்சியை கைப்பற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி.. உரையாற்றும் பிரதமர் மோடி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 14 Nov 2025 14:54 PM IST

பீகார், நவம்பர் 14, 2025: பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அபார வெற்றியை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கிறது. மேலும் முதல்வர் நிதிஷ் குமார் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஆட்சி அமைக்கத் தயாராக இருப்பதாகத் கூறப்படுகிறது. மாநிலத்தில் உள்ள 243 இடங்களில் 200 இடங்களில் தேசிய ஜன்நாயக கூட்டணி முன்னிலை வகிப்பதைக் காட்டுகின்றன. பீகாரில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியடையும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கட்சி தொண்டர்களிடையே உரையாற்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்:

பீகாரில் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில் நவம்பர் 14, 2025 தேதியான இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து காலை முதல் பாரதியா ஜனதாவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது 203 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பீகாரில் NDA முன்னிலை வகித்து வரும் நிலையில், நிதிஷ் குமார் மற்றும் பிரதமர் மோடியின் புகழ் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு NDA 206 இடங்களை வென்ற சாதனையை அவர்கள் முறியடிக்கத் தயாராக உள்ளனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றொரு வரலாற்று வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில், மக்கள் மீண்டும் ஒருமுறை முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை தற்போதைய நிலவரம் காட்டுகின்றன.

மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி:

தற்போதைய நிலவரப்படி, நிதிஷ் குமார் தலைமையிலான NDA மொத்தம் 197 இடங்களைப் பெற்றுள்ளது, இதில் பாஜக 90 இடங்களிலும், ஜேடியு 80 இடங்களிலும், எல்ஜேபி 20 இடங்களிலும், எச்ஏஎம் 3 இடங்களிலும், ஆர்எல்எம் 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, மதியம் 12:52 மணி நிலவரப்படி.

நம்பிக்கையான, ஒருங்கிணைந்த பாஜக-ஜேடியு கூட்டணியின் மீள் வருகை இந்த முறை போர்க்களத்தை கணிசமாக மாற்றியமைத்துள்ளது. பிரச்சாரம் முழுவதும் பிரதமர் மோடி நிதிஷ் குமாருக்கு அருகில் உறுதியாக நின்றதால், கூட்டணி ஒன்றுபட்ட மற்றும் புத்துயிர் பெற்ற முன்னணியை முன்வைத்தது.