Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
பீகார் சட்டமன்ற தேர்தல் - Bihar Assembly Election

பீகார் சட்டமன்ற தேர்தல் - Bihar Assembly Election

பீகார் சட்டமன்ற தேர்தல் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 என இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கின்றன. இதனையடுத்து நவம்பர் 14, 2025 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் நவம்பர் 6 அன்று 121 இடங்களுக்கும், நவம்பர் 11 அன்று 122 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் மொத்தம் 74.2 மில்லியன் வாக்காளர்கள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்கு திருட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. வர்களில் 39.2 மில்லியன் ஆண்கள் மற்றும் 34.9 மில்லியன் பெண்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐந்து கட்சிகள் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன. பீகாரில் மூன்றாவது முன்னணியில் இருந்து மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (MIM) வேட்பாளர்களை நிறுத்துகிறது. மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (MIM) 16 மாவட்டங்களில் 32 வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது. 100 இடங்களில் போட்டியிடுவதாக கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி அறிவித்துள்ளார்.

Read More

பீகார் முதலமைச்சராக பதவியேற்றார் நிதிஷ் குமார்.. முழு விவரம்!

Bihar CM Oath Taking Ceremony : பீகார் முதல்வராக இது நிதிஷின் 10வது பதவிக்காலம். அவருடன் சேர்த்து, 26 அமைச்சர்களும் பதவியேற்றனர். புதிய அரசாங்கத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை ஒப்பந்தத்தின்படி, சபாநாயகர் உட்பட பாஜக 17 அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ளது. முழு விவரம் பார்க்கலாம்.

நிதீஷ்குமார் பதவியேற்பு.. வித்தியாச வேஷத்தில் வந்த தொண்டர்!

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், பீகார் முதல்வராக நிதிஷ் குமார் 10வது முறையாக பதவியேற்றார் . பிரதமர் மோடியைத் தவிர, அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டா, 11 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் மேடையில் இருந்தனர். இந்த பதவியேற்பு விழாவை காண தொண்டர்கள் பலரும் வருகை தந்திருந்தனர். அப்போது வித்தியாச வேஷத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்திய தொண்டர் அனைவரையும் கவர வைத்தார்

10வது முறையாக ஆட்சி அமைக்கும் நிதீஷ் குமார்.. இன்று பதவியேற்பு விழா.. பிரதமர் உட்பட பிற மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு..

CM Nitish Kumar Oath Taking Ceremony: 2025, நவம்பர் 20 ஆம் தேதியான இன்று, நிதீஷ் குமார் 10வது முறையாக பீகார் மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்கிறார். பதவியேற்பு விழா காலை 11:30 மணிக்கு பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெறும்.

பீகாரின் அடுத்த முதலமைச்சர் நிதீஷ் குமார்.. NDA கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு

Bihar CM Nitish Kumar : பீகாரின் அடுத்த முதலமைச்சராக நிதீஷ் குமார் 10வது முறையாகப் பதவியேற்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா துணை முதல்வர்களாகப் பதவியேற்பர். புதிய NDA அரசு நவம்பர் 20 அன்று பதவியேற்க உள்ளது

“தமிழ்நாடு தான் பாஜகவின் அடுத்த இலக்கு”.. நயினார் நாகேந்திரன் சூளுரை!

கடந்த ஆட்சிக் காலத்தில் டபுள் இன்ஜின் சர்காராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான மாநில அரசும் வாரி வழங்கிய வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு மகிழ்ந்த மக்கள் இந்தத் தேர்தலில் மாபெரும் வெற்றியை பரிசளித்திருப்பதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

பீகார் தேர்தல்: எந்தெந்த கட்சி எவ்வளவு தொகுதிகளில் வெற்றி?.. இதோ இறுதி முடிவு!!

EC final results out: பீகார் தேர்தலில் வரலாறு காணாத வகையில், தேசிய ஜனநாயக கூட்டணி 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. அதேசமயம், யார் முதல்வர் என்பதில் பாஜகவுக்கும் நிதிஷ்குமாருக்கும் இடையே சலசலப்பு ஏற்படாலம் என்றும் கூறப்படுகிறது.

பீகார் தேர்தல்: 2020 தேர்தலை விட NOTA-க்கு அதிக வாக்குகள் விழுந்ததால் அதிர்ச்சி!

Bihar Assembly Elections 2025 Results: பீகார் சட்டசபை தேர்தலில் 6,65,870 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், கடந்த 2020 தேர்தலில் பதிவான நோட்டா வாக்குகளை விட, இந்த தேர்தலில் அதிக வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளதும் தெரியவந்துள்ளது.

வெற்றிக்கு காரணம் இதுதான்…. பீகார் தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரதமர் மோடி கருத்து

Bihar Election Results : பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து,  நல்லாட்சி வென்றது… வளர்ச்சி வென்றது என பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பீகார் மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், இந்த வெற்றி பீகாரை மேலும் முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் என்று தெரிவித்தார்

பீகார் தேர்தலில் காங்.,க்கு ‘தோல்வின்னு சொல்ல முடியாது’.. செல்வப்பெருந்தகை தடாலடி!!

பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக போட்டியிட்ட 101 தொகுதிகளில் 90 தொகுதிகளில் முன்னிலை வகித்து அம்மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. இதுவே கடந்த 2020 சட்டமன்ற தேர்தலில் 74 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றிருந்த நிலையில், இம்முறை அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

பீகார் தேர்தல்: மாநிலத்தையே வியந்து பார்க்க வைத்த சிராக் பஸ்வானின் வெற்றி!!

Bihar election results 2025: பீகார் சட்டமன்ற தேர்தலில் மகாபந்தன் இந்தியா கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. அவர்கள் 34 தொகுதிகிளில் மட்டுமே முன்னிலையில் உள்ளனர். அதேசமயம் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மட்டுமே தனித்து 90க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

பீகாரில் ஆட்சியை கைப்பற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி.. உரையாற்றும் பிரதமர் மோடி..

பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அபார வெற்றியை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கிறது. மாநிலத்தில் உள்ள 243 இடங்களில் 200 இடங்களில் தேசிய ஜன்நாயக கூட்டணி முன்னிலை வகிப்பதைக் காட்டுகின்றன. பீகாரில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியடையும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கட்சி தொண்டர்களிடையே உரையாற்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Bihar Election 2025 : இளம் பாடகி முதல் சினிமா நடிகர் வரை.. பீகாரில் ஸ்டார் வேட்பாளர்களின் நிலவரம் என்ன?

Bihar election 2025 celebrity candidates result: 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிரபல வேட்பாளர்களான கேசரி லால் யாதவ், ரித்தேஷ் பாண்டே, மைதிலி தாக்கூர் ஆகியோரின் வருகை அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது. ஆர்ஜேடி, ஜான்சுராஜ், பாஜக சார்பில் போட்டியிடும் இவர்களின் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் குறித்து பார்க்கலாம்

Bihar Election Results 2025 : பீகாரில் NDA கூட்டணி தொடர்ந்து முன்னிலை.. மெஜாரிட்டியை நெருங்கியது!

Bihar elections 2025 Results : பீகாரில் 243 சட்டமன்ற இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தொடங்கியது. இரண்டு கட்டத் தேர்தலுக்கான 46 வாக்குச் சாவடிகளில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது . மேலும் விவரங்களை எண்ணிக்கை வாரியாக தெரிந்துகொள்ளலாம்

Bihar Election Result: பீகாரில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை.. முழு விவரம்..

Bihar Election Result: பீகார் சட்டமன்ர தேர்தலுக்காக வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. 243 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குகளை எண்ணுவதற்கு முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 243 தேர்தல் அதிகாரிகள் மேற்பார்வையின் கீழ் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும், அவர்களுடன் 243 பார்வையாளர்களும் வருவார்கள்.

பீகார் தேர்தல் 2025: பீகாரில் வாக்குப்பதிவு முடிந்தது.. எக்ஸிட் போல் முடிவுகள் யாருக்கு சாதகம்?

 நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பீகார் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது. இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்டத்தில், நவம்பர்  11, 2025 அன்று மாலை 5 மணி வரை 67.14 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இந்த நவம்பர் 14, 2025 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். எக்ஸிட் போல் முடிவுகள் குறித்து மிகுந்த உற்சாகம் நிலவுகிறது.