Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வெற்றிக்கு காரணம் இதுதான்…. பீகார் தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரதமர் மோடி கருத்து

Bihar Election Results : பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து,  நல்லாட்சி வென்றது… வளர்ச்சி வென்றது என பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பீகார் மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், இந்த வெற்றி பீகாரை மேலும் முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் என்று தெரிவித்தார்

வெற்றிக்கு காரணம் இதுதான்…. பீகார் தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரதமர் மோடி கருத்து
நிதிஷ் குமார் - பிரதமர் நரேந்திர மோடி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 14 Nov 2025 18:12 PM IST

பீகார், நவம்பர் 14 : பீகார் சட்டமன்றத் தேர்தலில் (Bihar Election) தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து,  நல்லாட்சி வென்றது, வளர்ச்சி வென்றது என பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பீகார் மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், இந்த வெற்றி பீகாரை மேலும் முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் என்று தெரிவித்தார். பீகார் சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14, 2025 அன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்துவருவதாக கூறப்படுகிறது. இந்த வெற்றி குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

‘நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி’

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பீகார் சட்டமன்ற தேர்தல் குறித்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தேசிய ஜனநாயக கூட்டணி வழங்கிய நல்லாட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. மக்களாட்சி வென்றுள்ளது. சமூக நீதி வென்றுள்ளது. பீகார் மக்களுக்கு என் மனமார்ந்த நன்றி. 2025 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வரலாற்றில் இல்லாத அளவுக்கு வெற்றியை வழங்கியுள்ளனர். இந்த வெற்றி எங்களை மேலும் உறுதியுடன் மக்கள் பணியாற்ற வைக்கும் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க : பீகாரில் NDA கூட்டணி தொடர்ந்து முன்னிலை.. மெஜாரிட்டியை நெருங்கியது!

பீகார் தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடியின் பதிவு

இதையும் படிக்க : பீகாரில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை.. முழு விவரம்..

நிதிஷ் குமாருக்கு வாழ்த்து

மேலும் பிரதமர் தனது பதிவில், பீகார் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செயல்படுத்திய வளர்ச்சி பணிகளையும், எதிர்கால திட்டங்களையும் மக்கள் ஆதரித்த காரணத்தால் தான் இந்த வெற்றி சாத்தியமானது என அவர் குறிப்பிட்டார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் முதல்வர் நிதிஷ் குமார், சிரக் பாஸ்வான், ஜிதன் ராம் மாஞ்சி, உபேந்திர குஷ்வாஹா என அனைவருக்கும் வாழ்த்துகள், இந்த வெற்றி முன்னெப்போதும் இல்லாத வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியை மக்கள் நம்புவதை இந்த வெற்றி காட்டுகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.