கடந்த 15 நாட்களில் புலிகள் தாக்கி 3 பேர் பலி.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்!
Farmer Killed in Tiger Attack | பெங்கள்ரூரில் காலை நேரத்தில் வனபகுதிக்கு சென்ற விவசாயி ஒருவர் புலி தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் இதுவரை கடந்த 15 நாட்களில் 3 பேர் புலி தாக்கி பலியாகியுள்ளனர்.
பெங்களூரு, நவம்பர் 08 : பெங்களூரில் (Bengaluru) புலி தாக்கி விவசாயி ஒருவர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த விவசாயி காலை நேரத்தில் வனபகுதிக்கு சென்ற நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும், கடந்த 15 நாட்களில் மட்டும் அங்கு இதுவரை மூன்று பேர் புலி தாக்கி பலியாகி உள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில், புலி தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
புலி தாக்கி பலியான விவசாயி
கர்நாடகா (Karnataka) மாநிலம் மைசூரு (Mysore) மாவட்டம் சரகூர் தாலுகாவை சேர்ந்தவர் சவுதயா நாயக். 35 வயதான இவர் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று (நவம்பர் 07, 2025) காலை வனப்பகுதிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், அங்கு வந்த புலி ஒன்று அவரை அடித்து கொலை செய்துள்ளது. வனப்பகுதிக்கு சென்ற நபர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அந்த பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க : ‘எறும்புகளுடன் என்னால் வாழ முடியாது… குழந்தையைப் பார்த்துக்கோங்க..’ – தற்கொலை செய்துகொண்ட பெண்
புலி தாக்கி சடலமாக கிடந்த விவசாயி
அப்போது அந்த விவசாயி புலி தாக்கி உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அது குறித்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : காய்கறி வியாபாரிக்கு அடித்த யோகம்.. லாட்டரியில் ரூ.11 கோடி பரிசு.. நண்பனுக்கும் கொடுப்பேன் என பெருமிதம்!
15 நாட்களில் 3 பேரை கொன்ற புலிகள்
அந்த பகுதியில் கடந்த 15 நாட்களில் மட்டும் 3 பேர் புலி தாக்கி பலியாகியுள்ளனர். இந்த நிலையில், பெந்தியூர் மற்றும் நஹாராலொல் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் சஃபாரி மற்றும் டிரக்கிங் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இந்த நிலையில், 15 நாட்களில் மூன்றாவதாக ஒருவர் புலி தாக்கி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.