பூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர்.. நேராக டெல்லி குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல்
Narendra Modi : பூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்தார். அங்கு, டெல்லி குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். முன்னதாக பூட்டானில் பேசிய பிரதமர், எந்த சதிகாரரும் தப்பிக்க மாட்டார்கள் என்று தெளிவாகக் கூறினார்.
பூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) டெல்லி குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்தார். டெல்லி காவல்துறை =தனது இரண்டு நாள் பயணமாக பூட்டான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 12, 2025 அன்று இந்தியா திரும்பியுள்ளார். இந்த நிலையில் அவர் டெல்லியில் தரையிறங்கியதும், பிரதமரின் இல்லத்திற்கு நேரடியாகச் செல்வதற்குப் பதிலாக, அவர் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு, டெல்லி குண்டுவெடிப்பில் (Bomb Blast) காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். முன்னதாக பூட்டானில் பேசிய பிரதமர், எந்த சதிகாரரும் தப்பிக்க மாட்டார்கள் என்று தெளிவாகக் கூறினார். டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பான கூட்டமும் நவம்பர் 12, 2025 இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது.
டெல்லி குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை சந்தித்து பிரதமர் ஆறுதல்
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பூட்டானில் இருந்து திரும்பினார். குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களைச் சந்திக்க அவர் நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று அவர்களுக்கு முழு ஆதரவை உறுதி செய்தார். அங்குள்ள மருத்துவர்கள் குழுவையும் அவர் சந்தித்தார். மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த பிறகு, சதிகாரர்கள் தப்பிக்க மாட்டார்கள் என்று பிரதமர் மோடி மீண்டும் ஒருமுறை கூறினார்.




இதையும் படிக்க : டெல்லி குண்டுவெடிப்பு… புல்வாமாவுடன் தொடர்பா? பரபரப்பு தகவல்
காயமடைந்தவர்களை சந்தித் பிரதமர் மோடி
Went to LNJP Hospital and met those injured during the blast in Delhi. Praying for everyone’s quick recovery.
Those behind the conspiracy will be brought to justice! pic.twitter.com/HfgKs8yeVp
— Narendra Modi (@narendramodi) November 12, 2025
செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில், டெல்லி காவல்துறை கோட்வாலி காவல் நிலையத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டம் (UAPA) பிரிவுகள் 16 மற்றும் 18, வெடிபொருட்கள் சட்டம் மற்றும் BNS பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், முழு வழக்கின் விசாரணையும் தேசிய விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காரில் டாக்டர் உமர் இருந்தாரா?
பயங்கரவாதி டாக்டர் உமர் புல்வாமாவில் வசிப்பவர். அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்தார். செங்கோட்டை அருகே வெடித்த காரில் பயங்கரவாதி உமர் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், உமர் இருந்தாரா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. தற்போது டிஎன்ஏ மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன, அதன் பிறகுதான் காரில் உமர் இருந்தாரா? இல்லையா? என்பதை தீர்மானிக்க முடியும்.
இதையும் படிக்க : டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் திடீர் திருப்பம் – வழக்கை கையிலெடுத்த என்ஐஏ – விசாரணை தீவிரம்
அல் ஃபலா பல்கலைக்கழகம், தௌஜ், ஃபதேபூர் டாகா, ஃபரிதாபாத் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு அமைப்புகள் சோதனைகளை மேற்கொண்டுள்ளன. டாக்டர் உமர் அங்கு பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் காது மடல், நுரையீரல் மற்றும் குடல்கள் பாதிக்கப்பட்டிருந்தது பரிசோதனையில் தெளிவாக தெரிந்தது. மேலும், உடல்களில் எலும்பு முறிவுகள் மற்றும் தலையில் காயங்கள் இருந்தன. கடுமையான காயங்கள் மற்றும் அதிக இரத்தப்போக்கு காரணமாக இந்த இறப்புகள் நிகழ்ந்தன.