Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பீகாரில் 2ஆம் கட்ட தேர்தல்: இன்று மாலையுடன் இறுதிக்கட்ட பிரசாரம் ஓய்கிறது!!

இரண்டாம் கட்ட தேர்தலுக்காக தலைவர்கள் அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பீகார் மக்கள் இந்தியா கூட்டணிக்கு 65 வோல்ட் அதிர்ச்சியை கொடுத்ததால், அவர்கள் தூக்கமில்லாத இரவுகளைக் கழிப்பதாகவும், 2ம் கட்ட தேர்தலில் அதேபோன்ற சாதனையை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

பீகாரில் 2ஆம் கட்ட தேர்தல்: இன்று மாலையுடன் இறுதிக்கட்ட பிரசாரம் ஓய்கிறது!!
Bihar Election 2nd Phase
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 09 Nov 2025 11:36 AM IST

பீகார், நவம்பர் 09: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 2ம் கட்ட தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. அதில், முதல்கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளுக்கு கடந்த நவ.6ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (நவ.11) தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வகையில் 65.08% வாக்குகள் பதிவாகின. அதாவது, 73 ஆண்டுகளுக்கு பின் பீகாரில் அதிகளவு வாக்குப்பதிவு நடந்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. தொடர்ந்து, இரண்டாம் கட்ட தேர்தலிலும் அதேபோல அதிகளவில் வாக்குப்பதிவு நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிக்க : 73 ஆண்டுகளுக்கு பின் பீகாரில் அதிகளவு வாக்குப்பதிவு.. SIR-ஐ குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் பெருமிதம்!!

பீகாரின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7 கோடியே 42 லட்சம். இவர்களில் ஆண்கள் 3 கோடியே 92 லட்சம். பெண்கள் 3 கோடியே 50 லட்சம் ஆவர். மொத்தம் 90 ஆயிரத்து 712 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அம்மாநிலத்தில், நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் ஆர்வத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிர களப்பணியாற்றி வருகிறது.

அதேசமயம், நிதிஷ்குமாரிடம் இருந்து இந்த முறை ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதாவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸின் மகா பந்தன் கூட்டணி உள்ளது. இங்கு பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியபோதிலும், பாஜக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பு:

அந்தவகையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்காக ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆகிய இரு கூட்டணிகளின் தலைவர்களும், இறுதிக்கட்ட தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, இந்தியா கூட்டணியின் பீகார் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க : 22 வாரங்களில் பிறந்து உயிர் பிழைத்த அதிசய குழந்தை.. மருத்துவர்கள் பெருமிதம்!

இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் 122 தொகுதிகளில் மொத்தம் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பெண்கள், இளைஞர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர் வாக்கு இந்த தேர்தலில் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்த பிறகு 11ஆம் தேதி வாக்குப் பதிவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து, வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.