Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

22 வாரங்களில் பிறந்து உயிர் பிழைத்த அதிசய குழந்தை.. மருத்துவர்கள் பெருமிதம்!

Baby Born In 22 Weeks Become Healthy | டெல்லியில் வெறும் 22 வாரங்களில் பிறந்த பெண் குழந்தை ஒன்று மருத்துவர்கள் வழங்கிய தொடர் தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது நலமுடன் உள்ளது. மருத்துவ உலகின் சாதனையாக இது கருதப்படுகிறது.

22 வாரங்களில் பிறந்து உயிர் பிழைத்த அதிசய குழந்தை.. மருத்துவர்கள் பெருமிதம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Nov 2025 18:56 PM IST

புதுடெல்லி, நவம்பர் 07 : தலைநகர் டெல்லியின் கிழக்கு பகுதியான பத்பர்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர்கள் சாஹில் தனேஜா மற்றும்  திவ்யா தம்பதி. இவர்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் இருந்துள்ளது. இதன் காரணமாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என செயற்கை கருத்தரிப்பு மையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சில சிகிச்சைகள் மேற்கொண்ட பிறகு திவ்யா கருதரித்துள்ளார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக அவர்களது வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டது.

22 வாரங்களில் பிறந்த குழந்தை

அதாவது பிரசவத்தில் 22வது வாரத்தில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வேறு வழி இல்லாமல் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றில் இருந்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. முன்கூட்டிய பிறந்ததன் காரணமாக அந்த குழந்தை வெறும் 525 கிராம் மட்டுமே இருந்துள்ளது. இதன் காரணமாக குழந்தையின் உடல் நலனை கருதி அதனை அவரச சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் மருத்துவம் செய்து வந்தனர்.

இதையும் படிங்க : ‘எறும்புகளுடன் என்னால் வாழ முடியாது… குழந்தையைப் பார்த்துக்கோங்க..’ – தற்கொலை செய்துகொண்ட பெண்

105 நாட்களுக்கு பிறகு உடல்நிலையில் முன்னேற்றம்

குழந்தைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 105 நாட்களுக்கு பிறகு குழந்தையின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது வெறும் 525 கிராம் மட்டுமே இருந்த குழந்தை தற்போது 2 கிலோ எடையில் உள்ளது. பொதுவாக ஒரு குழந்தை தாயின் கருவில் 40 வாரங்களுக்கும் மேல் இருக்க வேண்டும் என்றும் அப்போது தான் அந்த குழந்தை முழுமையான வளர்ச்சியை அடைய முடியும் எனவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த குழந்தை குறைவான் காலத்தில் பிறந்து அசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : காய்கறி வியாபாரிக்கு அடித்த யோகம்.. லாட்டரியில் ரூ.11 கோடி பரிசு.. நண்பனுக்கும் கொடுப்பேன் என பெருமிதம்!

இதுபோன்ற சூழலில் குழந்தை பிறந்தால் அந்த குழந்தை உயிர் பிழைப்பதே அரிதான ஒன்று என கூறும் மருத்துவர்கள் நவீன மருத்துவத்தின் சிறப்பு அம்சங்கள் மற்றும் உரிய நேரத்தில் வழங்கப்பட்ட சிகிச்சை ஆகியவற்றின் காரணமாக இன்று அந்த குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.