Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

“தமிழ்நாடு தான் பாஜகவின் அடுத்த இலக்கு”.. நயினார் நாகேந்திரன் சூளுரை!

கடந்த ஆட்சிக் காலத்தில் டபுள் இன்ஜின் சர்காராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான மாநில அரசும் வாரி வழங்கிய வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு மகிழ்ந்த மக்கள் இந்தத் தேர்தலில் மாபெரும் வெற்றியை பரிசளித்திருப்பதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

“தமிழ்நாடு தான் பாஜகவின் அடுத்த இலக்கு”.. நயினார் நாகேந்திரன் சூளுரை!
நயினார் நாகேந்திரன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 15 Nov 2025 11:57 AM IST

நெல்லை, நவம்பர் 15: பாஜக எனும் பெரும் சக்தியின் அடுத்த பயணம் தமிழகத்தை நோக்கியே உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜக எனும் பெரும் சக்தியின் அடுத்த பயணம் தமிழகத்தை நோக்கியே உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவை 122 இடங்கள் என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி சரித்திர வெற்றி பெற்றது. இதன் மூலம் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. அதேசமயம், பாஜக 89 இடங்களை கைப்பற்றி மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதனைத்தொடர்ந்து, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 85, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 19 இடங்களையும் கைப்பற்றி இருந்தன.

Also read: வெற்றிக்கு காரணம் இதுதான்…. பீகார் தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரதமர் மோடி கருத்து

நல்லாட்சியை அங்கீகரித்த மக்கள்:

பாஜகவின் வெற்றி குறித்து நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறும்போது, பீகாரில் மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம், அந்த மாநிலத்தில் ஏற்கெனவே நடந்த நல்லாட்சியை மக்கள் அங்கீகரித்துள்ளதாக கூறினார். மேலும், இந்தியா கூட்டணியை மக்கள் புறக்கணித்துக் கொண்டே வருவதாகவும், அந்தக் கூட்டணிக்கு தேசிய அளவில் தொடர் தோல்விகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் தங்கள் கூட்டணி அபார வெற்றி பெறும் என்று உறுதி கூறிய அவர், தேர்தல் ஆணையம் ஒரு தனிப்பட்ட அமைப்பு, அமலாக்கத் துறை ஒரு தனிப்பட்ட அமைப்பு, வருமான வரித் துறை ஒரு தனிப்பட்ட அமைப்பு இவற்றை, அரசியல் கட்சியுடன் ஒப்பிட்டுப் பேசுவது சரியல்ல என்று விளக்கமளித்தார்.

திமுகவின் சந்தர்ப்பவாத அரசியல்:

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றபோது, தேர்தல் ஆணையம் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது? திமுக ஜெயித்தால், தேர்தல் ஆணையம் நன்றாக செயல்படுகிறது என்று அர்த்தம். தோற்றுவிட்டால் தேர்தல் ஆணையம் ஒரு சாராருக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று அர்த்தமா? இது முற்றிலும், சந்தர்ப்பவாத அரசியல். தேர்தல் ஆணையத்தின் மீது அவதூறு பரப்பியவர்களை பீகார் மக்கள் புறக்கணித்துள்ளனர். அங்கு இந்தியா கூட்டணி தோல்விக்கு இதுவே முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார்.

நயினார் நாகேந்திரன் ட்விட்டர் பதிவு:

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் அனைத்து சதித் திட்டங்களையும் பொய் பிரச்சாரங்களையும் தவிடுபொடியாக்கி, மகாத்மா புத்தர் ஞானம் பெற்ற பீகார் மண்ணில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது தேசிய ஜனநாயகக் கூட்டணி.

Also read: பீகார் தேர்தல்: மாநிலத்தையே வியந்து பார்க்க வைத்த சிராக் பஸ்வானின் வெற்றி!!

தேர்தல் ஆணையத்தை குறை கூறுவதா?:

ஆடத் தெரியாதவன் தெரு கோணல் என்று சொல்லும் கதையாக, மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்க முடியாத அரைகுறைகள் தான் தேர்தல் ஆணையத்தின் நேர்மையைக் குறை சொல்வார்கள். தேர்தல் ஆணையம் நடத்திய தேர்தலின் மூலம் கிடைத்த எம்பி மற்றும் எம்எல்ஏ உள்ளிட்ட பதவிகளில் அமர்ந்து கொண்டு அதே தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகக் கற்களை வீசும் ஆட்கள் செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஜந்துக்கள் என்று அவர் விமர்சித்துள்ளார்.